புத்தகங்கள்
எனக்கும் சிவாவுக்கும் புக் படிக்கும் பழக்கம் நிறைய உண்டு. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை கண்டிப்பா லைப்ரரி போவோம் . அப்போ மித்துவுக்கும் புக் எடுக்க ஆரம்பிச்சு நாலு அஞ்சு மாசம் ஆச்சு.
இனிமே மித்துவின் புக் லிஸ்ட் அப்டேட் பண்ணலாம்னு ஆரம்பிச்சு இருக்கேன்
1 . இந்த வாரம் "Baby touch and feel " புக் தான் படிச்சிட்டு இருக்கோம் . little அனிமல்ஸ் படம் போட்டு அது கத்தும் ஒலியையும் போட்டு இருக்காங்க . அதோட உடம்பின் ஒரு உறுப்பை தொட்டு பாக்குற மாதிரியும் இருக்கு. So இப்போ வாத்து,நாய் குட்டி, முயல் குட்டி, ஆட்டு குட்டி ,பூனை குட்டின்னு ஒரே சத்தம் தான் .
இங்க வீட்டுக்கு கீழ பூனைங்க ஜாஸ்தி. so சின்ன வயசுலேர்ந்தே அவளுக்கு meow சத்தம் பழக்கம் . நல்லா சொல்லுவா. இப்போ பப்பி ,Duck சத்தம் பழகிட்டு இருக்கா.
புத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து
October 28, 2010
விளையாட்டு
சிவா ஆபீஸ் போன பின்னாடி கிட்ட தட்ட 9 மணி நேரம் நானும் , மித்ரா வும் தான். அதனால என் விளையாட்டு , வேலை எல்லாமே அவளோட தான் .
1 . ஆரம்பத்திலேர்ந்தே அவளுக்கு பிடிச்சது கலர் கலரான bolls . உருட்டி விடுறது, தூக்கிட்டு ஓடுறது, ஒளிச்சு வைக்கிறது, ஏதாவது பாத்திரத்தில் போட்டு போட்டு எடுக்குறதுன்னு நிறைய விளையாடுவோம் .
2 .கொஞ்சம் உக்கார ஆரம்பிச்சவுடன் பப்பு மம்மு கடஞ்சு கடஞ்சுனு ஒரு டப்பாவும் , Spoonumaa உட்கார்ந்த நல்ல நேரம் போகும்.
3 . மிதுக்கு 1 வயசு ஆரம்பத்திலேர்ந்தே லைப்ரரி போனா அவளுக்கு ஒரு புக் கண்டிப்பா உண்டு. அவ ரெகுலரா படிக்கலேன்னாலும் அப்போ அப்போ எடுத்து படம் பாப்பா ... இப்போ கொஞ்ச நாளா படிக்கிற நேரம் அதிகம் ஆகி இருக்கு .

ரெண்டு நாலா buds டப்பாவோட தான் எங்க விளையாட்டு.
எல்லாத்தையும் கீழ கொட்டி மறுபடியும் பொறுமையா எடுத்து உள்ள வைக்கிறா . சில சமயம் உள்ள அடுக்கி குடுக்க வேண்டியது என் இல்லேன்னா சிவா வோட வேலை ... ஆனா தூக்கம் வர வரைக்கும் நல்ல பொழுது போகுது.
அப்புறம் தண்ணி , காபி இப்படி எந்த liquid கிடைச்சாலும் இன்னொரு பத்திரம் எடுத்துகிட்டு transfer பண்ணி விளையாடுறா. ஆனா போக போக கீழ சிந்துற அளவு கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகுது . கைக்கும் கண்ணுக்கும் நல்ல coordination .
நேத்து அதே மாதிரி கடலை எடுத்து டப்பால போட்டு விளையாடுனா . ஒவ்வொன்னா போடா சொன்ன , ரெண்டு கடலை போட்டுட்டு மறுபடியும் அப்படியே கொட்ட ஆரம்பிச்சிட்டா .
October 27, 2010
வார்த்தைகள்
மித்து அம்மா , அப்பான்னு 8 மாசத்துலேய சொல்ல ஆரம்பிச்சுட்டா .
இதோ இப்போ 17 வது மாசம். இப்போ எல்லாம் தினம் தினம் புது புது வார்த்தை பேசுறா .
பாத்ரூம்,ஸ்டார்,ஆபீஸ்,சப்பாத்தி ,ஜட்டி ,பாட்டில் ,பேபி, தாதா, பட்டி, ஆயா, அத்தை , மாமா, சியா( Sreeya -Friends Daughter Name ) இதெல்லாம் இப்போ கொஞ்ச நாளா ரொம்ப use பண்ற வார்த்தைகள்.
October 21, 2010
காய்கறி ஆம்லேட்
தேவையான பொருட்கள்:
முட்டை-1
கேரெட் -1
மிளகுதூள்,சீரக தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை :
முட்டையை உடைத்து நன்கு அடித்து கொள்ளவும்.
கேரெட்டை தோல் சீவி துருவி கொள்ளவும் .
இதனை முட்டையுடன் கலந்து உப்பு, மிளகு சீரக தூள் சேர்க்கவும்.
தோசை கல் சூடானவுடன் முல்லை கலவையை ஊற்றி சிறிது என்னை ஊற்றி மூடி வைத்து வேக விடவும் .
பின் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.
பி.கு. : கேரெட் போலவே பீட்ரூட் ,முட்டைகோஸ் துருவியும் செய்யலாம் .சுவையான அதே சமயம் சத்து நிறைந்தது .
ராகி மால்ட்
ராகி மால்ட்-
செய்முறை
1 . சிறிது வெல்லத்தை சுடு நீரில் ஊற வைக்கவும்.
2 . கை பிடி அளவு ராகி கழுவி நீரில் ஊற வைக்கவும் .( குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும்.)
3 . ஊறிய ராகியை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்து கொள்ளவும்.
4 . அதுனுடன் கரைத்த வெல்ல நீரையும் , சிறிது பாலும் விட்டு அடி கனமான பாத்திரத்தில் மிக மிக குறைந்த தீயில் கிளறவும்.
ஆரம்பத்தில் சிறிது நீர்க்கவும், சிறி சிறிதாக கெட்டியாகவும் தரலாம். மிகவும் சக்தி நிறைந்தது, ஜீரணிக்க மிக எளிதானது.

இதே முறையில் சிவப்பு அரிசி ,கோதுமை கஞ்சியும் செய்யலாம்
October 18, 2010
நிலா நிலா வா வா
முன்னாடி நிலவை காட்டுறது கொஞ்சம் கஷ்டம். இப்போ அவளுக்கு அது மேல தான் இருக்கும்னு தெரிஞ்சு வெளிய போனதுமே தேடுறா... . நிலா நிலா வா வான்னு பாட கூட ஆரம்பிச்சாச்சு
Chubby Cheeks
Chubby Cheeks பாட்டுக்கு மித்து ஆடுற அழகே தனி .. அவளோட கன்னம் , என் கண்ணு, ன்னு மாத்தி மத்தி தொடுவா.
அவ வம்பு பண்றப்போ அவளை கொஞ்சம் divert பண்ணவும் எனக்கு இது rombaaaa use ஆவும்
விளையாட்டு
இப்போதைக்கு மித்ராவுக்கு பிடித்த ஒரே விளையாட்டு என் செருப்பை போட்டு வீடு முழுக்க நடப்பது தான்
October 14, 2010
மித்ராவுக்கு பிடித்தது
சாப்பாடு : சப்பாத்தி, பால் சாதம்,தக்காளி சாதம்,கீரை, Fruit Juices
உடை: கையில்லாத பனியன் , அரை கால் பேன்ட்
பிடித்த விளையாட்டு : சறுக்கு, அம்மா , அப்பா கால்ல குதிரை விளையாட
பிடித்த பொம்மைகள் : மொத மொத வாங்கின குரங்கு பொம்மை,musical Crab
இன்னும் தொடரும் .....
October 7, 2010
தோசையம்மா தோசை
தோசையம்மா தோசை...
மித்துவுக்கு தோசை சாப்பிடுவதை விட தோசை சுட ரொம்ப பிடிக்கும்.நான் எப்பவும் தோசை கல்லை அடுப்பில் வைத்தவுடன் , அவள் ஓடி வந்து தூக்க சொல்லுவாள்...
ஒரே நாளில் தோசை கரண்டியை பிடிக்கும் முறையை கற்று கொண்டாள்.. ( கொஞ்சம் ரிஸ்க் தான். பட் she is more conscious than me ) வீட்டில் நாங்க ரெண்டு பேர் தான் .. எனக்கு ஒரே பேச்சு துணை அவ தான் . அதனால் அவளுக்கு புரியும்னு நம்பி எல்லா விஷயமும் அவ கிட்ட பேசுவேன் .அதே போல் தோசை செய்முறையும் .. மாவு ஊத்தி , என்னை ஊத்தி,வெந்துச்சா ... வேகலையா . திருப்பி போட்டு, . இது அம்மாக்கு, இது அப்பாக்கு ... நான் சொல்ல சொல்ல , அவளும் திருப்பி சொல்ல...
தோசை சாப்பிட வைக்க நடக்கும் போராட்டமே மறந்து போய்டும்..
October 5, 2010
Subscribe to:
Posts (Atom)