Pages

Showing posts with label மித்ரா நேரங்கள்... Show all posts
Showing posts with label மித்ரா நேரங்கள்... Show all posts

March 2, 2012

மித்ராவின் முதல் X -Ray அனுபவம் (29 -02 -2012 )

சென்ற வாரம் ஊருக்கு போயிருந்தோம் . ஞாயிறு மதியம் கிளம்பும் நேரம் , மித்ரா கட்டிலேர்ந்து கீழ விழுந்துட்டா.. எப்பவும் எங்கயாவது  விழுந்தா முதல்ல அவளே எழுந்துட்டு தான் அப்புறம் வலிச்சா அழுவா . ஆனா இந்த தடவை வலது கை மேல விழுந்துட்டா .. நான் போய் தூக்கினா , கை வலிக்கிதும்மா ன்னு பயங்கர அழுகை . ஒரு 10 
நிமிஷம்   சமாதானம் படுத்தி பார்த்தோம் , ஒன்னும் சரி வரலை , எனக்கோ சின்னதா ஒரு பயம் ... சரி Dr  கிட்ட போலாம்னு வண்டில போனோம் , வண்டி எங்காவது குலுங்கினா கூட  வலிக்கிதுன்னு கத்துனா ... தோள் மேல வச்ச கை எடுக்கவே இல்லை ..Dr  தாத்தா கை தொட்டு பாக்க கூட விடலை , அவரோ .. வீக்கம் இல்லை , முதல்ல  சிரப்  குடுப்போம் , கொஞ்ச நேரம் பாத்துட்டு , அப்புறம் x - ray  எடுக்கலாம் சொல்லிட்டார். கிட்ட தட்ட 45  நிமிஷம் வரைக்கும் அழுகை ஓயவே இல்லை . கை தொட்டு கேட்டா ஒரு இடத்துல மட்டும் வலிக்கிறது அப்டின்னு சொன்னா .. சரின்னு x - ray எடுக்க போனோம் , அங்க போய் அந்த ரூம் ,machine  எல்லாம் பாத்த வுடனே " அம்மா என்ன பண்ண போறாங்க ? அப்டின்னு கேட்டு அதுக்கு ஒரு அழுகை .. அப்புறம் மெல்ல சொன்னேன் , கை வலிக்கிது இல்ல ? அதுனால , கைய போட்டோ எடுத்து பாக்க போறோம் ன்னு சொன்னேன் ... வேணாம் ம்மா வேணாம்மா ன்னு அழுகை , நெஜம்மா வே அப்போ எல்லாம் என் ஹார்ட் பீட் எகிறி போய் இருந்துச்சு , ஆனா மித்ராவை பயமுறுத்த கூடாதுன்னு , ஒன்னும் இல்லை டா சின்ன அடி தானே , போட்டோ எடுத்த வலி சரியாய் போய்டும்னு சொல்லி சமாளிச்சேன் , x -ray  எடுக்க அந்த அட்டை மேல கையே வைக்கலை .. கொஞ்சம் வம்படியா இழுத்து ரெண்டு மாதிரி வச்சு ஒரு வழியா எடுத்து முடிச்சோம் ....
இப்போ தான் twiste  ... x  ray  எடுத்த ஆள் உள்ள போன வுடனே ஆட்டம் ஆரம்பம் , யார் கை பெருசுன்னு வச்சு விளையாட ஆரம்பிச்சுட்டா .. ரெண்டு நிமிஷம் கழிச்சு தான் எனக்கே புரிஞ்சது .. அவ அடி பட்ட கை  ஒழுங்கா அசைச்சு விளையாடுறா ன்னு .. அப்புறம் என்ன , இப்டி , அப்டி ன்னு எல்லா பக்கமும் அசைச்சு பாத்தாச்சு .. அவளுக்கும் , இப்போ கை வலிக்கலை ன்னு புரிஞ்சுது .. ...
ஏன்டா இவ்ளோ அழுத ..?
வலிக்குமே நெனெச்சு அழுதேன் ம்மா.....
ஆப்பு எனக்கு  தான் .....
இன்னைக்கு வரைக்கும் ஊர்லேந்து யாராவது போன் பண்ணினா , எனக்கு கை சரியாய் போச்சு .. அப்டின்னு ஒரு statement ...

February 22, 2012

சந்தியாக்கு மாமி , எனக்கு அம்மா

சிங்கப்பூரில் இருக்கும் பொது மித்ராக்கு தெரிஞ்ச சொந்தங்கள் எல்லாம் அம்மா ,அப்பா ,அத்தை, மாமா ( என் மற்றும் அப்பாவின் நண்பர்கள் ) மட்டுமே .. இங்கே வந்த பின்னால், அதுவும் , அடிக்கடி திருவண்ணாமலை போய் வரும் வாய்ப்புகள் நிறையவே வந்து போனதால் , இப்போ கொனஜ்ம எல்லா சொந்தங்களும் பாப்பாக்கு நல்ல தெரியுது ,
 அதுவும் , என்னையும் , அவங்க அப்பவோயும் மற்ற எல்லாரும் எப்டி கூப்பிடுறாங்க அப்டின்னு தெரிஞ்சிகிறதுல மித்ராக்கு ஆர்வம் ஜாஸ்தி ... என் நாத்தனாரின் பெண்கள் என்னை மாமி ன்னு கூப்பிடுவாங்க ,ஆரம்பத்தில் மாமி சொல்லாதே அம்மா சொல்லு ன்னு ரொம்ப சண்டை போடுவா.. அப்புறம் எனக்கு அம்மா , சந்தியாக்கு மாமி ன்னு கொஞ்சம் இரவு முறைகள் புரிய ஆரம்பிச்சிடுச்சு ..
இப்போ வீட்ல இதை வச்சி தான் விளையாடுறோம் ...
சந்தியாக்கு நான் யாரு ?
நந்துக்கு மித்ரா அப்பா என்ன வேணும் ? இப்டி தான் ,
 இப்போ இன்னும் கொஞ்சம் முன்னேறி  இருக்கோம் ..
நேத்து ,
சந்தியா அம்மா பேரு என்ன?
நந்து அண்ணன் பேரு என்ன ?
சந்தியா அப்பா யாரு?
அம்மா தீபாவை எப்டி கூப்பிடுவேன் ? இப்டி நிறைய கேள்விகள் .. பல சமயம் சரியான பதில்கள் ..
எனக்கு மித்ரா கிட்ட ரொம்ப புடிச்ச இன்னொரு ரொம்ப நல்ல விஷயம் , ஏதாவது பதில் தெரியலை னா, எனக்கு தெரியலையே ன்னு ஒத்துப்பா...பதிலை நல்ல கிட்ட கேட்டு சொல்லி பாத்துப்பா.. முடிஞ்சவரை அடுத்த தடவை சரியாய் சொல்லிடுவா ..
இப்போ பெருகி  வரும் nueclier  குடும்ப  அமைப்பில் , இவளின் சொந்தங்கள் மீதான பிடிப்பு ஆறுதலும் சந்தோஷமும் தருது.. எப்பவும் இப்டியே இருக்கனும் ..

February 17, 2012

Status அனுப்பிட்டு வரேன்

இரவு 10 .30 மணி.. மிச்சம் இருந்த கொஞ்சம் வேலை முடிச்சிட்டு லேப்டாப் மூடி வச்சிட்டு வந்து படுத்தேன் .. பாப்பா பொய் லேப்டாப் திறந்து எதோ டிபே பாணின ...
அம்மு தூங்க வா... - அப்பா ...

பாப்பா வர போறியா இல்லையா ?

இரும்மா . Status அனுப்பிட்டு வரேன் ....- இது வேற யாரும் இல்லை மித்ரா தான்....

November 12, 2011

BOY & GIRL

போன வாரம் தான் மித்ராக்கு BOY /Girl வித்தியாசம் சொல்லி குடுத்தேன் ..

அப்பா ,பெரியப்பா , அண்ணன் , மாமா எல்லாம் குட் பாய் ..

அம்மா , மித்ரா , சந்தியா , கோமளா , நந்தினி எல்லாம் குட் கேர்ள் ...

இப்டி அவ பாத்து பழகின நபர்களை வச்சே சொன்னேன் .. நோ ரியாக்க்ஷன் ..


இன்னைக்கு ..

அம்மா நல்ல பொண்ணு ...

மித்ரா கூட நல்ல பொண்ணு ..

அப்பா நல்ல பொண்... இல்லை இல்லை குட் பாய் ... அப்பா பாய் தானேம்மா ?


அவளோட ஞாபக சக்தி நெனெச்சு சில சமயம் ஆச்சர்யமா இருக்கு ...

மித்ரா @ Schooby Dhoobie & அம்மா @ CALSOFTLABS

சிங்கபூர்லேர்ந்து வந்து மூணு மாசம் ஆச்சு. இங்க வந்ததுலேர்ந்து மித்ரா ஸ்கூல் போலாம்ன்னு சொல்லிட்டே இருந்தா...
 
வேலைக்கு போகணும் ன்னு முடிவு பண்ணதுமே பாப்பா கிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டேன் ... அம்மா வேலைக்கு போனா சாயந்திரம் தான் வருவேன் .. பாப்பா ஸ்கூல் போய்ட்டு வந்து சமத்தா விளைடிட்டு , தூங்கி எழுந்தா அம்மா வந்தேடுவேன் .. அப்படின்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன் .. சில சமயம் சரி சொல்லுவா .. ஆனா நிறைய தடவை வேணாம் போ ன்னு தான் சொல்லிவா...

போன வாரம் தான் வேலை கிடைச்சது .


இப்போதைக்கு வீடு மாற வேணாம் ன்னு முடிவு பண்ணி பக்கத்துலேயே play ஸ்கூல் போய் பாத்துட்டு வந்தோம் . ஓரளவிற்கு நல்லாவே இருந்துச்சி ..
சரி ன்னு செவ்வாய் கிழமை போய் பணம் கட்டிட்டு வந்தேன் ..

புதன் கிழமை நல்லா தான் விடிஞ்சுது .. பால் குடிச்சு , புது டிரஸ் போட்டு , bag மாட்டி கிளம்பிட்டா ...

ஸ்கூல் வாசல் போனவுடனே மேடம் க்கு மனசு மாறிடுச்சு .. அம்மா ஸ்கூல் வேணாம் ம்மா ன்னு ஒரே அடம் .. ஒரு வழியா பேசி பேசி .. நான் வெளியவே உட்கார்ந்து இருக்கேன் ன்னு சத்தியம்  எல்லாம் பண்ணி .. உள்ள அனுப்பினா ... பத்தாவது நிமிஷம் பயங்கர அழுகை ...

வேற வழி இல்லாம சீக்கிரம் கூட்டிட்டு வந்தேன் ...

வியாழகிழமை ..................

எல்லாம் ரெடி .. ஸ்கூல் போய் அழ மாட்டேன் ன்னு திருப்பி திருப்பி சொல்லிகிட்டே வந்தா.. ஆனா வாசல் போனவுடனே அம்மா போகாதே போகாதே ன்னு அழுகை .. மனசை தேத்திட்டு வெளிய வந்துட்டேன் .. அரை மணி நேரம் கழிச்சு போய் பாத்தா ஒரு மாதிரி வேடிக்கை பாக்க ஆரம்பிச்சு இருந்தா ...1 மணி நேரம் கழிச்சு அவங்களே இன்னைக்கு போதும் ன்னு போக சொல்லிட்டாங்க ..

வெளிய வந்தவ வீர நடை போட்டு எனக்கு முன்னாடி நடக்க ஆரம்பிச்சுட்டா.


அம்மா ... அம்மா....

சொல்லுடா..

நீ ஆபீஸ் போக போறியா?

ஆமாம் செல்லம்மா ...

ம் போ போ .. நான் ஸ்கூல் போறேன் .. நீ ஆபீஸ் போ .. அடம் பண்ண மாட்டேன் ..


வெள்ளிகிழமை ....

சீக்கிரம் எழுந்து மதியத்துக்கு சமச்சி வெச்சுட்டு பாப்பாவை ரெடி பண்ணியாச்சு ... மனசுக்குள்ள ஒரே பயம் .. எப்படி என்னை விட்டிட்டு 7 /8 மணி நேரம் இருக்க போறா?...

ஸ்கூல் போகும் போதே பயங்கர அழுகை .. அவங்க அப்பா லீவ் போட்டு கூட இருக்கிற தெம்பில் கிளம்பியாச்சு ...

10 .30 :

சிவா பாப்பா அழுறாளா?

வீட்டுல இருக்கேன் . ஸ்கூல் போய் பாக்குறேன் ..

மனசுக்குள்ள பக் பக் ...

11 .00

ஸ்கூல் போனா , என் கூடவே வந்துட்டா..

அழழையா?

இல்லை .. இரு பேச சொல்றேன் ...

....

..

அம்மா ..

கன்னுக்குட்டி ..

அம்மா ஆபீஸ் போய்டியா?

ஆமாம் டா..

சரி ம்மா .. சீக்கிரம் வந்துடு ...


ஹப்பா.. அந்த நிமிஷம் மனசுக்குல வந்த சந்தோசம் வார்த்தையால சொல்ல முடியாது


சாயந்தரம் குள்ள 3 தடவை போன்ல பேசினேன் ... ஒரு சின்ன அடம் , அழுகை கூட இல்லை ..

இந்த வயதில் எப்படி வந்தது இத்தனை புரிதல் ?....


திங்கள் கிழமை ..

நினைக்கவே பயம்மா  தான் இருக்கு ... நாங்க ரெண்டு பேரும் இல்லாம ஆயா கூட எப்டி இருக்கா போறா?