Pages

September 9, 2012

சலங்கை இட்டாள் ஒரு மாது



மித்ரா விற்கு வியாழன் அன்று அவளுடைய நடன பள்ளியில் சலங்கை குடுத்தார்கள் , வகுப்பில் சேர்க்கும் போதே சீக்கிரம் குழந்தைகல்லு சலங்கை குடுத்து விடுவோம்ன்னு அவர் ஆசிரியை சொன்னார். அதற்கான காரணமும் எனக்கு பிடித்து இருந்தது ... அந்த சலங்கையில் ஒலியே குழந்தைகளுக்கு ஆர்வத்தையும் , பயிற்சி எடுக்கும் போது கவனத்தையும் கொடுக்கும்   என்பது  தான் அது ...
பழக ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளே மித்ரா என்னாகும் சலகை வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விட்டால் . வகுப்பில் எல்லாரும் கட்டி ஆடும் போது அவளுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.. போன வாரம் ரொம்ப கேட்டு அடம் பண்ண ஆரம்பிச்சுட்டா .. ஆன்டி கிட்ட கேட்டால் , அவள் அளவு சலங்கை வந்துடுச்சு வந்து வாங்கிகோங்க அப்டின்னு சொன்னங்க .. வியாழன் அன்று நானும் மித்ரா கூட வகுப்புக்கு போய் பணம் குடுத்து சலங்கை வாங்கிட்டேன் .
அதை அவர்களே பூஜையில் வைத்து மித்ரா கையால் எடுக்க சொல்லி அவங்களே கட்டி விட்டாங்க ... அந்த நிமிஷம் மித்ராவின் மன நிலை எப்படி இருந்திருக்குமோ தெரியலை .. ஆனால் நான் , சந்தோஷத்தின் எல்லையில் தான் இருந்தேன் ... என் சிறு வயசு ஆசை , ஏக்கம் எல்லாமே இன்று என் கண் முன்னால் நிறைவேறியது ..
 இனி , அவளை அந்த ஆர்வத்தில் இருந்து திசை திருப்பாமல் , வளர்க்க வேண்டிய பொறுப்பு அதிகரித்து உள்ளது ...

 

நானும் என் தையல் இயந்திரமும்



இந்த வலை பதிவினை மித்ராவிற்காக ஆரம்பித்து இப்போ என்னை பற்றியும் கொஞ்சம் சேர்க்க ஆரம்பிச்சிட்டேன்
விஷயம் என்னன்னா என் பல வருஷ கனவு போன ஞாயிறு அன்று தான் நிறைவேறியது .. உஷா தையல் இயந்திரம் வாங்கிட்டேனே ...
போன ஞாயிறு அன்று வாங்கியது இன்னைக்கு தான் பிரிக்க போறேன் . வீட்டில் வைக்க சரியான உயரத்தில் எதுவும் இல்லாததால் , டேபிள் ஆர்டர் குடுத்து இருந்தேன் , அது வியாழன் அன்று தான் வந்தது ..  வெள்ளிகிழமை  எதுவும் செய்ய முடியலை ... செனி அன்று வழக்கம் போல வெளியே சுத்தியாச்சு ..
கொஞ்சம் அறிவு , நிறைய ஆர்வம் . இது தான் இப்போதைய நிலைப்பாடு ... நிறைய வலைபூக்கள் தான் என் குரு ..

இனிமே மித்ராவிற்காக நிறைய தைக்க வேண்டும் , என் துணிகளை நானே தைக்க கற்றுக்கொள்ள வேண்டும் ... ம்ம் இன்னும் நிறைய .

எல்லாவற்றுக்கும் நேரத்தை திறமையாக நிரவகம் செய்ய வேண்டும் , வேலை ,  வீட்டு நிர்வாகம் ,மித்ரவிற்கான நேரம் ,  சுய தொழில் அப்புறம் .. என் பொழுதுபோக்கு இப்படி எல்லாவற்றுக்கும் நேரத்தை , ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்...

September 3, 2012

தைக்கும் தை , தைகே தை

இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு . நடுவில் , கொஞ்சம் வேலை , அதிக பயணம் எல்லாம் சேர்ந்து என் நேரத்தை திருடி விட்டது ...
மீண்டும்  எனக்கான நேரத்தை கண்டுபிடித்து விட்டேன் ...
ஒரு இரண்டு மாசமா மித்ரா பரதநாட்டியம் வகுப்புக்கு போய்ட்டு இருக்கா. அதுனால வாரத்தில் இரண்டு நாள் குட்டி பொண்ணு பிஸி . ஆனா நாள் முழுக்க , வரம் முழுக்க ஒரே தைக்கும் தை , தைகே தை தான் . இன்னும் அவளுக்கு வகுப்பில்  ரொம்ப பயிற்சி இல்லை , ஆனாலும் மத்தவங்களுக்கு சொல்லி குடுக்குறதை பார்த்தே நல்ல ஆடுறா . எனக்கு அவளை ரொம்பவும் சிரம படுத்த விருப்பம் இல்லை . சும்மா அந்த சூழலுக்கு பழகட்டுமே அப்டின்னு தான் சேத்து விட்டேன். ஆனா இப்போ  அவள் ஈடுபாட்டை பக்க சந்தோஷமா இருக்கு

July 17, 2012

ஹாப்பி பர்த்டே Dad !

சிவா பிறந்த நாள் ஜூலை 5 , முதல் நாள் மித்ராவை கூட்டிகிட்டு போய் கேக் வாங்கிட்டு மேல கொண்டு போய் வச்சிட்டு ,
பாப்பா , அப்பா கிட்ட சொல்லாதே , நாளைக்கு surprice ஆ கேக் வெட்டலாம்னு சொல்லி வச்சேன் , எல்லாத்துக்கும் நல்லா தலை ஆடி வச்சா .
8 .30 மணிக்கு அவங்க அப்பா வந்து வாசல்ல வண்டி நிறுத்த கூட இல்லை . பக்கத்துல போய் மெதுவா எனக்கு கேக்காத மாதிரி
"அப்பா உனக்கு அம்மா ஹாப்பி பர்த்டே கேக் வாங்கி ஒளிச்சு வச்சு இருக்காங்க " அப்படின்னு சொல்லி வச்சிட்டா..

I Am Back

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு பதிவின் பக்கம் வருகிறேன் , எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் , நேரம் இன்மை , சோம்பல் காரணமாக நாளைக்கு நாளைக்குன்னு தள்ளி போட்டுட்டே போயாச்சு ...
கிட்டத்தட்ட 4 மாசம் ,
இந்த இடைவெளியில் மித்ரா
  1. மித்ராக்கு 3 வயசு ஆச்சு
  2. .பரதநாட்டியம் வகுப்பு சேர்த்தாச்சு .
  3. கர்நாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சாச்சு.
  4. என்னை விட ரொம்ப நல்லா கன்னடம் பேசுறா.
  5. முதல் திருக்குறள் கத்துகிட்டாச்சு.
  6. கார்த்திக், தமனா தெரியுது
  7. ரெண்டு பேர் பேசிகிட்டு இருக்கும் பொது இடையில பேச கூடாதுன்னு கத்துகிட்டாச்சு .
ம்ம்ம் அப்புறம்....
 
கட்டிட்டு இருக்கிற வீடு வேலை 90 % முடிஞ்சுது
ஒரு வழியா வீடு கிரஹப்ரவேசத்துக்கு நாள் பாத்தாச்சு ( அக்டோபர் 28 )
நான் தையல் வகுப்பு சேர்ந்தாச்சு ..
MA சைகாலோஜி படிக்க ஆசைப்பட்டு , IGNOU வில் விண்ணப்பமும் போட்டாச்சு

June 11, 2012

முத்து மணி மாலை...

 ரொம்ப நாளாவே தையல் கலையிலும் , செயற்கை நகைகள் செய்வதிலும் இருந்த ஆர்வத்தை செயல் படுத்தி பார்க்கும் வேகம் இந்த வாரம் கொஞ்சம் நிறையவே இருந்தது , அதுவும் இங்கே BTM  வேடு மாறியதும் , ஒரு கடையை வேறு பாத்து வச்சிருந்தேன் ,  நகைகள் செய்ய , உடை அலங்காரம் செய்ய தேவையான பொருட்கள் கிடைக்கும் கடை அது ,
வெள்ளி கிழமை சிவா வர தாமதம் ஆகும் என்று தெரிந்த வுடனே , வலையில் இருந்து , ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தேவையான பொருட்கள் லிஸ்ட் எடுத்துட்டு மித்ரவோட கிளம்பியாச்சு ..
கடைக்கு போய் எல்லாத்தையும் வாங்கிட்டும்   வந்தாச்சி
 , மித்ரா 10 .30 க்கு தூங்கிட்டா
 அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு , முதல்ல மணி கோர்க்கலாம்ன்னு முடிவு பண்ணி ஆரம்பிச்சுட்டேன் .
முதல் பிரச்னை , அந்த வயரில் அவ்ளோ சின்ன மணி கோக்குறது .. இவ்ளோ நேரம் இதனை கூர்மையான பார்வையோடு உட்கார்ந்து ரொம்ப நாள் ஆச்சு ... கொஞ்சம் கண் வலி , கொஞ்சம் முதுகு வலி .. எல்லாம்  கோர்த்து முடிச்ச அந்த அழகான மணியை பார்த்தவுடனே  பறந்து போச்சு ...
அப்புறம் சின்னதாய் ஒரு தோடு , அந்த மணிக்கு பொருத்தமாய் ...
செய்து முடிக்கவும் , மித்ரா bathrrom  போக விழிக்கவும் சரியாய்  இருந்துச்சு .. தூக்கத்திலேயே  அந்த மணியை பார்த்ததும் , அவளுக்கு பயங்கர  சந்தோசம், எனக்கம்மா . எனக்கம்மா அப்டின்னு நாலஞ்சு தடவை கேட்டாச்சு .. சரிடா.. காலையில எழுந்து குளிச்சிட்டு போட்டுக்கலாம்னு சொல்லி தூங்க வெச்சிட்டேன் ..
காலையில எழுந்து முதல் வேலையா அவள் கேட்டது , அம்மா எனக்கு மணி போட்டு விடம்மா ..

ஹப்பா இந்த சந்தொஷதுக்காவது  அடிக்கடி ஏதாவது செய்யணும்னு தோணுது ..
சனி, ஞாயிறு ரெண்டு நாள்  அந்த மணியை பாப்பா கழட்டவே இல்லை ...

April 5, 2012

மித்ராவிற்கு கொஞ்சம்  கொஞ்சமாய் பாரதியாரையும் , திருவள்ளுவரையும்  , பொன்னியின் செல்வனையும், அறிமுக படுத்த நான் ஆயத்தம் ஆகிறேன் .
ஏற்கனவே அச்சம் இல்லை அச்சம் இல்லையும் , ஓடி விளையாடு பாப்பாவும் , அவளுக்கு தெரிந்தே இருக்கும் என நினைகிறேன் .. ஆனாலும் , வெறும் பாடல்கள் என்பதை
 தாண்டி  , நல்ல தமிழை அவளுக்கு அறிமுக படுத்த ஆசை .

March 9, 2012

தூரமா , பக்கமா ...

இப்போதைக்கு வீட்டில் திரும்ப திரும்ப விளையாட  படும் ஒரே விளையாட்டு  Shadow  மாட்சிங் - அவளோட சிங்கப்பூர் ஸ்கூல் friend  பிறந்த நாளுக்கு வந்த goodie  Bag  ..
கிட்டத்தட்ட 30  விதமான விலங்குகளும் , பறவைகளும் அதுல இருக்கு , 90 % எல்லாமே கண்டு பிடிச்சு பொறுத்திடுவா...

அப்புறம் இப்போ தான் எதிர் சொல் பத்தி பேச ஆரம்பிசிருகோம் , ஏன்னா , தான் சின்ன பொண்ணு , அப்பா , அப்பா எல்லாம் பெரியவங்க , தானும் வளைந்து பெரிய பொண்ணு ஆவோம்ன்னு  நல்ல புரிய ஆரம்பிச்சிருக்கு ..
 சின்னது , பெரிசு
 குட்டி , உயரம்
கொஞ்சம் , நிறைய
கீழ , மேல ..
தூரமா , பக்கமா ...
இன்னும் நிறைய சொல்லணும்

சொல் சொல் அவளிடம் சொல்...

 
 மித்ராவிற்கு இதுவரை பிடித்த /இனி பிடிக்க போகும் பாடல்களை தொகுக்க திட்டமிட்டு இருக்கிறேன்
அவளுக்கு முடிந்த வரை நல்ல தமிழ் பாடல்களை அறிமுகம் செய்து வைக்கவே விரும்புகிறேன் ,தாலாட்டு பாடுவதன் மூலமாகவும், இப்போது மடிகணினியில் அடிக்கடி பாட்டு கேட்பதன் மூளவும் செய்தும் வருகிறேன் , ஆனாலும் எங்கேயோ எப்போதோ  இப்போதைய குத்து பாடல்களும் சில மெல்லிசை பாடல்களும் அவளை பெரிதும் ஈர்த்து விடுகிறது .. 
என்ன பண்றது.....  அதையுமே பதிந்து வைக்க போகிறேன் .. பிற்காலத்தில் இதை பார்த்து அவளின் சின்ன வயசு  ரசனை  பற்றி தெரிஞ்சுக்கட்டும்
 
இப்போதைக்கு அவளோட TOP  10  
 
1 . ஆராரோ ஆரிரரோ , அம்புலிக்கு நேர் இவரோ ( சிறுத்தை )
2 . ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கி போட்டு (மைனா)
3 . பட்டாம் பூச்சி கூப்பிடும் போது( ஒரு ௪ மாசம் முன்னாடி இது மட்டும் தான் அவள் டாப் 10  , 20  எல்லாம் )
4 . மாசமா , 6  மாசமா (எங்கேயும் எப்பொதும்)
5 . வா வா என் தேவதையே (அபியும் நானும் )
6  ராஜா சின்ன ரோஜா  கூட காட்டு பக்கம் போனாராம் ( ராஜா சின்ன ரோஜா )
7  சொல் சொல் அவளிடம் சொல் , என்றே காதல் சொல்லியதே ( பையா)
8 . யம்மா யம்மா காதல் பொன்னம்மா (7  ஆவது அறிவு )
 
சினிமா பாடல்கள் தவிர
1  மாடு மேய்க்கும் கண்ணே (அருணா சாய்ராம்)
2  விஷமக்கார கண்ணன்
3 . கர்நாடக ஸ்வர வரிசை ( 3  ஆவது தாளத்தில் மட்டும் )
 
 
 

March 2, 2012

மித்ராவின் முதல் X -Ray அனுபவம் (29 -02 -2012 )

சென்ற வாரம் ஊருக்கு போயிருந்தோம் . ஞாயிறு மதியம் கிளம்பும் நேரம் , மித்ரா கட்டிலேர்ந்து கீழ விழுந்துட்டா.. எப்பவும் எங்கயாவது  விழுந்தா முதல்ல அவளே எழுந்துட்டு தான் அப்புறம் வலிச்சா அழுவா . ஆனா இந்த தடவை வலது கை மேல விழுந்துட்டா .. நான் போய் தூக்கினா , கை வலிக்கிதும்மா ன்னு பயங்கர அழுகை . ஒரு 10 
நிமிஷம்   சமாதானம் படுத்தி பார்த்தோம் , ஒன்னும் சரி வரலை , எனக்கோ சின்னதா ஒரு பயம் ... சரி Dr  கிட்ட போலாம்னு வண்டில போனோம் , வண்டி எங்காவது குலுங்கினா கூட  வலிக்கிதுன்னு கத்துனா ... தோள் மேல வச்ச கை எடுக்கவே இல்லை ..Dr  தாத்தா கை தொட்டு பாக்க கூட விடலை , அவரோ .. வீக்கம் இல்லை , முதல்ல  சிரப்  குடுப்போம் , கொஞ்ச நேரம் பாத்துட்டு , அப்புறம் x - ray  எடுக்கலாம் சொல்லிட்டார். கிட்ட தட்ட 45  நிமிஷம் வரைக்கும் அழுகை ஓயவே இல்லை . கை தொட்டு கேட்டா ஒரு இடத்துல மட்டும் வலிக்கிறது அப்டின்னு சொன்னா .. சரின்னு x - ray எடுக்க போனோம் , அங்க போய் அந்த ரூம் ,machine  எல்லாம் பாத்த வுடனே " அம்மா என்ன பண்ண போறாங்க ? அப்டின்னு கேட்டு அதுக்கு ஒரு அழுகை .. அப்புறம் மெல்ல சொன்னேன் , கை வலிக்கிது இல்ல ? அதுனால , கைய போட்டோ எடுத்து பாக்க போறோம் ன்னு சொன்னேன் ... வேணாம் ம்மா வேணாம்மா ன்னு அழுகை , நெஜம்மா வே அப்போ எல்லாம் என் ஹார்ட் பீட் எகிறி போய் இருந்துச்சு , ஆனா மித்ராவை பயமுறுத்த கூடாதுன்னு , ஒன்னும் இல்லை டா சின்ன அடி தானே , போட்டோ எடுத்த வலி சரியாய் போய்டும்னு சொல்லி சமாளிச்சேன் , x -ray  எடுக்க அந்த அட்டை மேல கையே வைக்கலை .. கொஞ்சம் வம்படியா இழுத்து ரெண்டு மாதிரி வச்சு ஒரு வழியா எடுத்து முடிச்சோம் ....
இப்போ தான் twiste  ... x  ray  எடுத்த ஆள் உள்ள போன வுடனே ஆட்டம் ஆரம்பம் , யார் கை பெருசுன்னு வச்சு விளையாட ஆரம்பிச்சுட்டா .. ரெண்டு நிமிஷம் கழிச்சு தான் எனக்கே புரிஞ்சது .. அவ அடி பட்ட கை  ஒழுங்கா அசைச்சு விளையாடுறா ன்னு .. அப்புறம் என்ன , இப்டி , அப்டி ன்னு எல்லா பக்கமும் அசைச்சு பாத்தாச்சு .. அவளுக்கும் , இப்போ கை வலிக்கலை ன்னு புரிஞ்சுது .. ...
ஏன்டா இவ்ளோ அழுத ..?
வலிக்குமே நெனெச்சு அழுதேன் ம்மா.....
ஆப்பு எனக்கு  தான் .....
இன்னைக்கு வரைக்கும் ஊர்லேந்து யாராவது போன் பண்ணினா , எனக்கு கை சரியாய் போச்சு .. அப்டின்னு ஒரு statement ...

February 22, 2012

சந்தியாக்கு மாமி , எனக்கு அம்மா

சிங்கப்பூரில் இருக்கும் பொது மித்ராக்கு தெரிஞ்ச சொந்தங்கள் எல்லாம் அம்மா ,அப்பா ,அத்தை, மாமா ( என் மற்றும் அப்பாவின் நண்பர்கள் ) மட்டுமே .. இங்கே வந்த பின்னால், அதுவும் , அடிக்கடி திருவண்ணாமலை போய் வரும் வாய்ப்புகள் நிறையவே வந்து போனதால் , இப்போ கொனஜ்ம எல்லா சொந்தங்களும் பாப்பாக்கு நல்ல தெரியுது ,
 அதுவும் , என்னையும் , அவங்க அப்பவோயும் மற்ற எல்லாரும் எப்டி கூப்பிடுறாங்க அப்டின்னு தெரிஞ்சிகிறதுல மித்ராக்கு ஆர்வம் ஜாஸ்தி ... என் நாத்தனாரின் பெண்கள் என்னை மாமி ன்னு கூப்பிடுவாங்க ,ஆரம்பத்தில் மாமி சொல்லாதே அம்மா சொல்லு ன்னு ரொம்ப சண்டை போடுவா.. அப்புறம் எனக்கு அம்மா , சந்தியாக்கு மாமி ன்னு கொஞ்சம் இரவு முறைகள் புரிய ஆரம்பிச்சிடுச்சு ..
இப்போ வீட்ல இதை வச்சி தான் விளையாடுறோம் ...
சந்தியாக்கு நான் யாரு ?
நந்துக்கு மித்ரா அப்பா என்ன வேணும் ? இப்டி தான் ,
 இப்போ இன்னும் கொஞ்சம் முன்னேறி  இருக்கோம் ..
நேத்து ,
சந்தியா அம்மா பேரு என்ன?
நந்து அண்ணன் பேரு என்ன ?
சந்தியா அப்பா யாரு?
அம்மா தீபாவை எப்டி கூப்பிடுவேன் ? இப்டி நிறைய கேள்விகள் .. பல சமயம் சரியான பதில்கள் ..
எனக்கு மித்ரா கிட்ட ரொம்ப புடிச்ச இன்னொரு ரொம்ப நல்ல விஷயம் , ஏதாவது பதில் தெரியலை னா, எனக்கு தெரியலையே ன்னு ஒத்துப்பா...பதிலை நல்ல கிட்ட கேட்டு சொல்லி பாத்துப்பா.. முடிஞ்சவரை அடுத்த தடவை சரியாய் சொல்லிடுவா ..
இப்போ பெருகி  வரும் nueclier  குடும்ப  அமைப்பில் , இவளின் சொந்தங்கள் மீதான பிடிப்பு ஆறுதலும் சந்தோஷமும் தருது.. எப்பவும் இப்டியே இருக்கனும் ..

February 17, 2012

Status அனுப்பிட்டு வரேன்

இரவு 10 .30 மணி.. மிச்சம் இருந்த கொஞ்சம் வேலை முடிச்சிட்டு லேப்டாப் மூடி வச்சிட்டு வந்து படுத்தேன் .. பாப்பா பொய் லேப்டாப் திறந்து எதோ டிபே பாணின ...
அம்மு தூங்க வா... - அப்பா ...

பாப்பா வர போறியா இல்லையா ?

இரும்மா . Status அனுப்பிட்டு வரேன் ....- இது வேற யாரும் இல்லை மித்ரா தான்....

February 16, 2012

கைவிடப்பட்டவர்கள்! - ஆனந்த விகடன் - 2012-02-22

என்னைபோன்ற பெற்றோர்களின் கருத்தை , இல்லை இல்லை தீர்வை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்
இந்த கட்டுரையை பகிர்கிறேன் .
எனது கருத்து பின்னர் வரும் ...

கைவிடப்பட்டவர்கள்! - ஆனந்த விகடன் - 2012-02-22

February 8, 2012

எங்கேயோ படித்து...

To make a difference:

• Make Learning a habit

• Treat ethics as important

• Be trust worthy

• Innovate Constantly

• Believe in yourself.

• Have Passion in whatever you execute

 love Dew Drops which is very beautiful .. and would like to convey that

              D - Dream Big

                           Our Dreams limit our achievements

              E – Enjoy Life

                           Have fun in all the activities you do

            W – Work Hard

                          To create history
 வாரத்திற்கு இனி இரண்டு பதிவுகளாவது எழுத வேண்டும் என்று முடிவு செய்து உள்ளேன் .. 
இப்போதெல்லாம் மித்ராவுடன் செலவழிக்கும் நேரம் குறைந்து விட்டது .. வேலைக்கு போவதால்.. அதனால் குறைந்த நேரம் எனினும் , நிறைவாக செலவழிக்க வேண்டும் என முடிவு செய்து உள்ளேன் ... முயற்சியும் செய்து வருகிறேன்
வளர வளர மித்ரா விஷயங்களை கிரஹிக்கும் வேகம் அதிகமா ஆய்ட்டு வருது . டிவி யில் வரும் பெரும்பாலான விளம்பரங்கள் அவளுக்கு மனப்பாடம் , சில நேரம் இது வருத்தத்தை தந்தாலும் , பல விஷயங்களை கற்று கொள்கிறாள் . முக்கியமாக மனித மரணம் பற்றி அவளுக்கு விளக்க தொலைகாட்சி நிகழ்ச்சிகளே எனக்கு  பெரிதும் உதவியது .
அவள் கற்றுகொள்ளும் வேகத்துக்கு , நல்ல விஷயங்களை அறிமுக படுத்துவதை என் /எங்கள் கடமையாகவே உணர்கிறோம் ..

மிக சிறந்த திருமண நாள் பரிசு

 இன்னைக்கு எங்க கல்யாண நாள். நேத்து டிரஸ் எடுக்க கடைக்கு போனப்போ  , மித்து கிட்ட , பப்பு நாளைக்கு அம்மாக்கும் , அப்பாக்கும் கல்யாண நாள் டா, நீ ஹாப்பி வெட்டிங் டே சொல்லுவியா  ? ன்னு  கேட்டேன்? , ( அவளுக்கு  ஏற்கனவே , பர்த்டே , ஹாப்பி பர்த்டே எல்லாம் தெரியுமே )
அப்போ மித்ராக்கு வெட்டிங் டே? என்னக்கு வெட்டிங் டே இல்லையான்னு கேட்டா...
பாப்பா வளைந்து பெரிய பொண்ணு ஆனா வுடனே பாப்பாக்கு  கூட  கல்யாணம் நடக்குமா , அப்புறம் வெட்டிங் டே வரும் ன்னு சொன்னேன் . அவளுக்கு இப்போ கல்யாணம் , செத்து போய்ட்டாங்க , பாப்பா பொறந்துடுச்சு  எல்லாம் புரியுது .... அதனால் மழுப்ப விரும்பாமல் அப்படியே உள்ளதை சொன்னேன் ...
 
ஹாய் அப்போ பாப்பாக்கு  அப்புறம் வரும் , நாளைக்கு அம்மாக்கு, அப்பாக்கு வெட்டிங் டே ன்னு சந்தோசம் ஆய்ட்டா.
 
முக்கியமான விஷயம் இன்னைக்கு காலையில தான் .. எழுபினப்போ நான் நேத்து வாங்கின டிரஸ் போட்டு இருந்தேன் , உடனே அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு... ஹாய் , இன்னைக்கு அம்மாக்கு ஹாப்பி வெட்டிங் டே அப்டின்னு கத்துனா..
ஒரு அம்மாக்கு வேற என்ன சந்தோசம் இருக்கு முடியும் ?
 
மிக சிறந்த திருமண நாள் பரிசு .. :-)
 
 

Activities for Mithra

browse for Activites for mithra and reached this .. Its really gave lot of idea ...

1. Play dough - Kids can be be engaged with play dough by letting them make different shapes or roll, knead, cut. Use home made play dough with different food color. 1 cup plain flour, 1/2 salt, 1/2 tsp oil, and enough water to make the dough. add different food color for different colored dough. It's harmless. u can even store it in the fridge after he finishes playing.
2. While going for a walk collect stones, leaves of different shapes, flowers, pebbles and try to decorate a sheet of paper with his collection. He can paint the pebbles and make different things such as toad stool. depends on the shape of the pebbles. You can make him stick the leaves in the paper, or make leaf print by applying paint on one side of the leaf and taking the print on the paper. While doing this, talk about the shapes (oblong, ovate, linear etc )and pattern of the leaves (simple compound), it's symmetry etc..
3. make him sort the beans of different shapes and color.  You can do this with his cars and trucks (sort based on size, color, or no of wheels etc)
4. give him a bowl full of dhal or rice and provide him with spoons and bowls and plates of different sizes. kids love to scoop and pour the dhal in the bowl. They can be engaged for atleasthalf an hour thro this activity. But be ready to clear the mess. Best is to spread a mat and let him play. teach him to play within the mat. This improves his motor skills.
5. let him play with his bath toys in the bathtub. He can learn about float and sink
6. Provide him with lots of art supplies. let him paint any junk such as toilet paper rolls, rocks, pebbles, pine cones,  you can even make him paint the egg shell and decorate a twig to make a flower vase.  
7. let him use his motor skills in sticking the beans of different colors or rice or nut shells within a picture or a shape to make an art work.  This improves his fine motor skills.
8. Draw pictures of balloons with the straight string and let him use the plastic scissors to cut along the string. similarly draw pictures of flower with a long stem. and let him cut along the straight lines (stem). once he is comfortable, draw the stem or balloon string with zig zag lines or curves. This also improves his motor skills,
9. take his help in cooking. While you make chapati, give him a small ball of dough to make his own chapati.
10. make a tent with bed sheets and dining table and let him have his cave and play inside with his animals. join him in his adventure
11. On a dark evening, use the torch light and play I spy. Let him use his light to find the objects. Give the clues using colors, shapes. use the words small, large, tall short under above below after before etc.
12. use blocks of different shapes and form some pattern sequence and let him continue the patterns or even make his own pattern.
13. Provide him with a magnet and let him observe which all would be attracted and which wouldn't
14. Provide him with the alphabet shapes or any geometrical shapes and let him trace around them.
15. Role play as doctor patient, teacher student, buyer seller, mom and baby etc
16. Play tag to burn out his energy (after you get well :-) ). Kids like to be chased.
17. Make Block prints (with vegetables such as tomatoes, potatoes, or nut shells). You can even use the toy cars'  tire to make the prints on a sheet of paper.
18. Make your own musical instruments using all the unwanted stuff in your house. use a plastic bottle and put some beans and seal it properly and use it as maracas. Use a rectangular steel box and chop sticks to use it as drum, cut out a cardboard in a guitar shape and tie or paste strings or use rubber bands to pretend it to be a guitar.
19. Play hide and seek
20. let him make his own book by stapling some papers together and sticking pictures from magazines and newspapers. You can even make an alphabet book by categorizing the pictures based on the starting alphabets and make him decorate the page with stickers, crayons, you can even mke him trace the upper and lower case letters in each page.

January 10, 2012

Siksha Montessori -First day @ Montessori School

நேத்துலேர்ந்து மித்ரா "Siksha Montessori "- BTM  போக ஆரம்பிச்சுட்டா . நன் ஏற்கனவே அங்க போய் பார்த்துட்டு வந்ததால நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன் . மித்துக்கு கூட ரொம்ப நாள்  கழிச்சு ஸ்கூல் போறதால நல்ல மூட் ல இருந்தா.. ஆனா எப்பவும்  போல ஸ்கூல் வாசல் வந்த வுடன் "அம்மா கூல்ஸ் வேணாம்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா . சரின்னு கை பிடிச்சு ரூம் க்கு உள்ள கூட்டிட்டு போனேன். போறதுக்கு முன்னாடியே நிறைய கண்டிசன்ஸ் போட்டுங்க... பேச கூடாது, குழந்தையை போ , அதை பண்ணு , இதை பண்ணு ன்னு சொல்ல கூடாது ன்னு நிறைய ...
சரின்னு போய் சேர் போட்டு உட்காந்தோம் . அப்புறம் மெல்ல ஒரு ஆன்டி ( டீச்சர் ன்னு கூப்பிட தேவை இல்லை ) வந்து , மித்ரா , "Shall  we  do  puzzle  ?  ன்னுகேட்டுட்டு அவளுக்கு "Vegetables  Puzzle  " எடுத்து காமிச்சாங்க .. மித்ராக்கு ரொம்ப பிடிச்சது . அப்புறம் மேட் போட்டு உட்கார சொல்ல தந்தாங்க . 4 Puzzle  அவளே செஞ்சா. அப்புறம் ஆன்டி " HI  FI  " சொன்னங்க . மித்ராக்கு ஒரே குஷி.. .
Puzzle முடிச்ச பின்னாடி எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வக்க சொன்னங்க . ( ஆன்டி இங்கிலீஷ்  மித்ரவால புரிஞ்சிக்க முடிஞ்சது-Good  -ஏன்னா நான் வீட்ல இங்கிலீஷ் பேசறது கிடையாது )ஹாய் இந்த பழக்கம் வீட்ல வந்தா எவ்ளோ நல்ல இருக்கும் . ஏற்கனவே அவ சாப்பிட்ட சாமான் எல்லாம் sink  ல போய் போடுரவ தான் ,ஆனா விளையாட்டு சமான் கொஞ்சம் கஷ்டம் தான் ..
 
அப்புறம் மேட் மடிக்க சொல்லி குடுத்தாங்க ..
 
ஸ்நாக்ஸ் டைம் ல மித்ரா வட்டத்துல   உட்கார போகவே மாட்டேன் டா ,
அப்புறம் என்ன ? என் பக்கத்திலேயே சேர் போட்டு உட்காந்து சாப்டச்சு. அப்போ தான் காஞ்சி சாப்டு வந்ததால பசிக்கல  போல . ஒரு துண்டு கேக் சாப்ட்டு போலாம் ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டா .
பை பை சொல்லிடு வீட்டுக்கு வந்துட்டோம் ...