Pages

January 10, 2012

Siksha Montessori -First day @ Montessori School

நேத்துலேர்ந்து மித்ரா "Siksha Montessori "- BTM  போக ஆரம்பிச்சுட்டா . நன் ஏற்கனவே அங்க போய் பார்த்துட்டு வந்ததால நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன் . மித்துக்கு கூட ரொம்ப நாள்  கழிச்சு ஸ்கூல் போறதால நல்ல மூட் ல இருந்தா.. ஆனா எப்பவும்  போல ஸ்கூல் வாசல் வந்த வுடன் "அம்மா கூல்ஸ் வேணாம்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா . சரின்னு கை பிடிச்சு ரூம் க்கு உள்ள கூட்டிட்டு போனேன். போறதுக்கு முன்னாடியே நிறைய கண்டிசன்ஸ் போட்டுங்க... பேச கூடாது, குழந்தையை போ , அதை பண்ணு , இதை பண்ணு ன்னு சொல்ல கூடாது ன்னு நிறைய ...
சரின்னு போய் சேர் போட்டு உட்காந்தோம் . அப்புறம் மெல்ல ஒரு ஆன்டி ( டீச்சர் ன்னு கூப்பிட தேவை இல்லை ) வந்து , மித்ரா , "Shall  we  do  puzzle  ?  ன்னுகேட்டுட்டு அவளுக்கு "Vegetables  Puzzle  " எடுத்து காமிச்சாங்க .. மித்ராக்கு ரொம்ப பிடிச்சது . அப்புறம் மேட் போட்டு உட்கார சொல்ல தந்தாங்க . 4 Puzzle  அவளே செஞ்சா. அப்புறம் ஆன்டி " HI  FI  " சொன்னங்க . மித்ராக்கு ஒரே குஷி.. .
Puzzle முடிச்ச பின்னாடி எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வக்க சொன்னங்க . ( ஆன்டி இங்கிலீஷ்  மித்ரவால புரிஞ்சிக்க முடிஞ்சது-Good  -ஏன்னா நான் வீட்ல இங்கிலீஷ் பேசறது கிடையாது )ஹாய் இந்த பழக்கம் வீட்ல வந்தா எவ்ளோ நல்ல இருக்கும் . ஏற்கனவே அவ சாப்பிட்ட சாமான் எல்லாம் sink  ல போய் போடுரவ தான் ,ஆனா விளையாட்டு சமான் கொஞ்சம் கஷ்டம் தான் ..
 
அப்புறம் மேட் மடிக்க சொல்லி குடுத்தாங்க ..
 
ஸ்நாக்ஸ் டைம் ல மித்ரா வட்டத்துல   உட்கார போகவே மாட்டேன் டா ,
அப்புறம் என்ன ? என் பக்கத்திலேயே சேர் போட்டு உட்காந்து சாப்டச்சு. அப்போ தான் காஞ்சி சாப்டு வந்ததால பசிக்கல  போல . ஒரு துண்டு கேக் சாப்ட்டு போலாம் ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டா .
பை பை சொல்லிடு வீட்டுக்கு வந்துட்டோம் ...