Pages

July 17, 2012

ஹாப்பி பர்த்டே Dad !

சிவா பிறந்த நாள் ஜூலை 5 , முதல் நாள் மித்ராவை கூட்டிகிட்டு போய் கேக் வாங்கிட்டு மேல கொண்டு போய் வச்சிட்டு ,
பாப்பா , அப்பா கிட்ட சொல்லாதே , நாளைக்கு surprice ஆ கேக் வெட்டலாம்னு சொல்லி வச்சேன் , எல்லாத்துக்கும் நல்லா தலை ஆடி வச்சா .
8 .30 மணிக்கு அவங்க அப்பா வந்து வாசல்ல வண்டி நிறுத்த கூட இல்லை . பக்கத்துல போய் மெதுவா எனக்கு கேக்காத மாதிரி
"அப்பா உனக்கு அம்மா ஹாப்பி பர்த்டே கேக் வாங்கி ஒளிச்சு வச்சு இருக்காங்க " அப்படின்னு சொல்லி வச்சிட்டா..

I Am Back

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு பதிவின் பக்கம் வருகிறேன் , எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் , நேரம் இன்மை , சோம்பல் காரணமாக நாளைக்கு நாளைக்குன்னு தள்ளி போட்டுட்டே போயாச்சு ...
கிட்டத்தட்ட 4 மாசம் ,
இந்த இடைவெளியில் மித்ரா
  1. மித்ராக்கு 3 வயசு ஆச்சு
  2. .பரதநாட்டியம் வகுப்பு சேர்த்தாச்சு .
  3. கர்நாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சாச்சு.
  4. என்னை விட ரொம்ப நல்லா கன்னடம் பேசுறா.
  5. முதல் திருக்குறள் கத்துகிட்டாச்சு.
  6. கார்த்திக், தமனா தெரியுது
  7. ரெண்டு பேர் பேசிகிட்டு இருக்கும் பொது இடையில பேச கூடாதுன்னு கத்துகிட்டாச்சு .
ம்ம்ம் அப்புறம்....
 
கட்டிட்டு இருக்கிற வீடு வேலை 90 % முடிஞ்சுது
ஒரு வழியா வீடு கிரஹப்ரவேசத்துக்கு நாள் பாத்தாச்சு ( அக்டோபர் 28 )
நான் தையல் வகுப்பு சேர்ந்தாச்சு ..
MA சைகாலோஜி படிக்க ஆசைப்பட்டு , IGNOU வில் விண்ணப்பமும் போட்டாச்சு