இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான தண்ணீர் பாட்டில்களில் BPA Free என்னும் அடையாளங்களை பார்க்கலாம் .
என்ன இந்த BPA ?
BPA எனப்படும் bisphenol A வேதிப்பொருள் கடினமான பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்,மழலையர்களுக்கான பீடிங் பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவை தயாரிக்க உபயோகப்படுகின்றது . மேலும் இந்த BPA நஞ்சு பல்மருத்துவத்தில் பயன்படும் கூட்டுப்பொருள்களிலும், உணவையும் பானங்களையும் அடைக்கப் பயன்படும் அலுமினியக் குப்பிகளின் உட்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதுக்கு இப்போ என்னனு கேக்குறீங்களா?
இந்த பாட்டில்லே தண்ணீ குடிக்கிறதால குழந்தைகளுக்கு அதிலும் பாட்டில் நிறைய பயன்படுத்தும் பள்ளி குழந்தைகளுக்கு இரத்த சம்பந்தமான மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான சத்திய கூறுகளை அதிகபடுத்துது.
அது மட்டும் இல்லாம இப்போ குழந்தைகளிடையே ஒரு பெரிய பிரச்சனையான "Obesity " கிற உடல் எடை பிரசையும் இதனால அதிகரிக்கும் அப்டின்னு 2008 ல நடந்த ஆய்வுல கண்டுபிடிச்சு இருக்காங்க.
அது மட்டும் இல்லாம 2010 ல Tufts University Medical School ல நடந்த ஆய்வின் படி இந்த BPA புற்று நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிதாம் ...
அதுனால இனிமே குழந்தைக்கு பாட்டில் வாங்கும் போது பாட்டில் பின்னாடி ஒரு முக்கோணத்துல போட்டு இருக்கிற நம்பர் பாத்து வாங்கணும்.
3 ,7 -BPA கண்டிப்பாக இருக்கும் -தவிர்க்கவும்
1 ,2 , 4 ,5 மற்றும் 6 எண் கொண்ட பாட்டில்கள் வாங்க தகுதியானவை ...
No comments:
Post a Comment