Pages

March 9, 2012

தூரமா , பக்கமா ...

இப்போதைக்கு வீட்டில் திரும்ப திரும்ப விளையாட  படும் ஒரே விளையாட்டு  Shadow  மாட்சிங் - அவளோட சிங்கப்பூர் ஸ்கூல் friend  பிறந்த நாளுக்கு வந்த goodie  Bag  ..
கிட்டத்தட்ட 30  விதமான விலங்குகளும் , பறவைகளும் அதுல இருக்கு , 90 % எல்லாமே கண்டு பிடிச்சு பொறுத்திடுவா...

அப்புறம் இப்போ தான் எதிர் சொல் பத்தி பேச ஆரம்பிசிருகோம் , ஏன்னா , தான் சின்ன பொண்ணு , அப்பா , அப்பா எல்லாம் பெரியவங்க , தானும் வளைந்து பெரிய பொண்ணு ஆவோம்ன்னு  நல்ல புரிய ஆரம்பிச்சிருக்கு ..
 சின்னது , பெரிசு
 குட்டி , உயரம்
கொஞ்சம் , நிறைய
கீழ , மேல ..
தூரமா , பக்கமா ...
இன்னும் நிறைய சொல்லணும்

சொல் சொல் அவளிடம் சொல்...

 
 மித்ராவிற்கு இதுவரை பிடித்த /இனி பிடிக்க போகும் பாடல்களை தொகுக்க திட்டமிட்டு இருக்கிறேன்
அவளுக்கு முடிந்த வரை நல்ல தமிழ் பாடல்களை அறிமுகம் செய்து வைக்கவே விரும்புகிறேன் ,தாலாட்டு பாடுவதன் மூலமாகவும், இப்போது மடிகணினியில் அடிக்கடி பாட்டு கேட்பதன் மூளவும் செய்தும் வருகிறேன் , ஆனாலும் எங்கேயோ எப்போதோ  இப்போதைய குத்து பாடல்களும் சில மெல்லிசை பாடல்களும் அவளை பெரிதும் ஈர்த்து விடுகிறது .. 
என்ன பண்றது.....  அதையுமே பதிந்து வைக்க போகிறேன் .. பிற்காலத்தில் இதை பார்த்து அவளின் சின்ன வயசு  ரசனை  பற்றி தெரிஞ்சுக்கட்டும்
 
இப்போதைக்கு அவளோட TOP  10  
 
1 . ஆராரோ ஆரிரரோ , அம்புலிக்கு நேர் இவரோ ( சிறுத்தை )
2 . ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கி போட்டு (மைனா)
3 . பட்டாம் பூச்சி கூப்பிடும் போது( ஒரு ௪ மாசம் முன்னாடி இது மட்டும் தான் அவள் டாப் 10  , 20  எல்லாம் )
4 . மாசமா , 6  மாசமா (எங்கேயும் எப்பொதும்)
5 . வா வா என் தேவதையே (அபியும் நானும் )
6  ராஜா சின்ன ரோஜா  கூட காட்டு பக்கம் போனாராம் ( ராஜா சின்ன ரோஜா )
7  சொல் சொல் அவளிடம் சொல் , என்றே காதல் சொல்லியதே ( பையா)
8 . யம்மா யம்மா காதல் பொன்னம்மா (7  ஆவது அறிவு )
 
சினிமா பாடல்கள் தவிர
1  மாடு மேய்க்கும் கண்ணே (அருணா சாய்ராம்)
2  விஷமக்கார கண்ணன்
3 . கர்நாடக ஸ்வர வரிசை ( 3  ஆவது தாளத்தில் மட்டும் )
 
 
 

March 2, 2012

மித்ராவின் முதல் X -Ray அனுபவம் (29 -02 -2012 )

சென்ற வாரம் ஊருக்கு போயிருந்தோம் . ஞாயிறு மதியம் கிளம்பும் நேரம் , மித்ரா கட்டிலேர்ந்து கீழ விழுந்துட்டா.. எப்பவும் எங்கயாவது  விழுந்தா முதல்ல அவளே எழுந்துட்டு தான் அப்புறம் வலிச்சா அழுவா . ஆனா இந்த தடவை வலது கை மேல விழுந்துட்டா .. நான் போய் தூக்கினா , கை வலிக்கிதும்மா ன்னு பயங்கர அழுகை . ஒரு 10 
நிமிஷம்   சமாதானம் படுத்தி பார்த்தோம் , ஒன்னும் சரி வரலை , எனக்கோ சின்னதா ஒரு பயம் ... சரி Dr  கிட்ட போலாம்னு வண்டில போனோம் , வண்டி எங்காவது குலுங்கினா கூட  வலிக்கிதுன்னு கத்துனா ... தோள் மேல வச்ச கை எடுக்கவே இல்லை ..Dr  தாத்தா கை தொட்டு பாக்க கூட விடலை , அவரோ .. வீக்கம் இல்லை , முதல்ல  சிரப்  குடுப்போம் , கொஞ்ச நேரம் பாத்துட்டு , அப்புறம் x - ray  எடுக்கலாம் சொல்லிட்டார். கிட்ட தட்ட 45  நிமிஷம் வரைக்கும் அழுகை ஓயவே இல்லை . கை தொட்டு கேட்டா ஒரு இடத்துல மட்டும் வலிக்கிறது அப்டின்னு சொன்னா .. சரின்னு x - ray எடுக்க போனோம் , அங்க போய் அந்த ரூம் ,machine  எல்லாம் பாத்த வுடனே " அம்மா என்ன பண்ண போறாங்க ? அப்டின்னு கேட்டு அதுக்கு ஒரு அழுகை .. அப்புறம் மெல்ல சொன்னேன் , கை வலிக்கிது இல்ல ? அதுனால , கைய போட்டோ எடுத்து பாக்க போறோம் ன்னு சொன்னேன் ... வேணாம் ம்மா வேணாம்மா ன்னு அழுகை , நெஜம்மா வே அப்போ எல்லாம் என் ஹார்ட் பீட் எகிறி போய் இருந்துச்சு , ஆனா மித்ராவை பயமுறுத்த கூடாதுன்னு , ஒன்னும் இல்லை டா சின்ன அடி தானே , போட்டோ எடுத்த வலி சரியாய் போய்டும்னு சொல்லி சமாளிச்சேன் , x -ray  எடுக்க அந்த அட்டை மேல கையே வைக்கலை .. கொஞ்சம் வம்படியா இழுத்து ரெண்டு மாதிரி வச்சு ஒரு வழியா எடுத்து முடிச்சோம் ....
இப்போ தான் twiste  ... x  ray  எடுத்த ஆள் உள்ள போன வுடனே ஆட்டம் ஆரம்பம் , யார் கை பெருசுன்னு வச்சு விளையாட ஆரம்பிச்சுட்டா .. ரெண்டு நிமிஷம் கழிச்சு தான் எனக்கே புரிஞ்சது .. அவ அடி பட்ட கை  ஒழுங்கா அசைச்சு விளையாடுறா ன்னு .. அப்புறம் என்ன , இப்டி , அப்டி ன்னு எல்லா பக்கமும் அசைச்சு பாத்தாச்சு .. அவளுக்கும் , இப்போ கை வலிக்கலை ன்னு புரிஞ்சுது .. ...
ஏன்டா இவ்ளோ அழுத ..?
வலிக்குமே நெனெச்சு அழுதேன் ம்மா.....
ஆப்பு எனக்கு  தான் .....
இன்னைக்கு வரைக்கும் ஊர்லேந்து யாராவது போன் பண்ணினா , எனக்கு கை சரியாய் போச்சு .. அப்டின்னு ஒரு statement ...