Pages

November 28, 2010

World Toilet Day - நவம்பர் 19th

அன்று DC  யில் படித்த செய்தி:700 m mobile users, but only 366 m Indians have toilet access

 இந்த  செய்தியை வாசிக்கும் போதே மனசு வலிக்கிறது .
.100  கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் நாட்டில் அடிப்படை சுகாதார வசதிகளை கூட மேம்படுத்த யோசிக்க கூட செய்யாத  அரசாங்கம் :-( .
 தமிழ் நாட்டில்  ஏன் சென்னையிலேயே கூட  எனக்கு  தெரிந்தே இன்னும் எத்தனையோ சேரி பகுதிகளில் ஒழுங்கான கழிப்பிட வசதிகள் இல்லை. ஆனால் அவர்கள் கையில் மின்னும் செல் போன். இதற்கு முக்கிய காரணம் செல் போன் விளம்பரங்கள் கடைகோடி மக்களை சென்று சேர்ந்த அளவுக்கு கூட சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு சேரவில்லை. இதற்கு சில தொலைகாட்சி விளம்பரங்களே சாட்சி.( காசநோய்க்கான  அரசு சுகாதார  விளம்பரம்- ரொம்ப மொக்கை) ...
நம்  மக்களுக்கு அடிப்படையிலேயே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மிக குறைவு.
 
 சிங்கப்பூரின் சுத்தம் நாம் நன்கு அறிந்த ஒன்றே...ஆனால் இங்கேயும்  "லிட்டில் இந்தியா" எனப்படும் இந்தியர்கள் மிக அதிகம் புழங்கும் பகுதியில் உள்ள கழிப்பிடங்களின் சுத்தம் மற்றும் மேற்பார்வை  மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது மிக மோசம் .  
 
இங்கே எந்த ஒரு பொது நிகழ்ச்சி நடை பெற்றாலும் அங்கே தற்காலிக கழிப்பிட வசதி கண்டிப்பாக இருக்கும் . ஆனால் நம் ஊரிலோ "கடல் அலை" போல் தொண்டர் படை திரண்டது என்று பெருமை பேசும் கட்சி பொது கூட்டங்களில் கூட அந்த வசதிகளை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.கூட்டம் நடக்கும் இடத்தில அருகில் உள்ள கட்டடங்களின் சுவர்களின்  நிலைமை மிக பரிதாபம். ...
 
.இதை நான் வெறும் ஒப்பீடுக்காக மட்டும் சொல்லவில்லை..  என்று மாறும் என் சகோதரனனின்  நிலைமை என்ற ஏக்கத்திலும் தான்  

November 26, 2010

Snaks Time

 
 
குழந்தைகளுக்கு கடையில் வாங்கி குடுக்குற நொறுக்ஸ் விட வீட்லயே வெரைட்டியா செஞ்சு தர்றது தான் நல்லதுன்னு எல்லாருக்குமே தெரியும் . ஆனா இந்த காலத்து பிள்ளைகள் நாம கத்து குடுக்குறதுக்கு முன்னாடியே  எல்லாம் தெரிஞ்சுகிறாங்க...
 
ஆனாலும்  அம்மா கை பக்குவம் மாதிரி வருமா...?
 
 மித்துக்கு பிடிச்ச  சில சத்தான நொறுக்ஸ்
 
1 .இன்ஸ்டன்ட் நொறுக்ஸ்னா அது பொரி தான். ஆனா நல்லாமென்னு சாப்பிடுற குட்டீஸ்க்கு தான் இது சரியாய் வரும்.
2 . அவல்+ சக்கரை+தேங்காய் மிக்ஸ்.
3 .எள்ளு உருண்டை .
4 .கடலை மிட்டாய்.
5  உருளை கிழங்கு fry ( Home Made Potato wedges :-)  )
6.பச்சை பயிறு வடை
7  கேழ்வரகு மாவு பகோடா.
 
 
பி. கு  : இது என்      25   ஆவது  பதிவு...
 

November 24, 2010

மித்துவின் மிரட்டல்

இப்போ எல்லாம் மித்துக்கு ரொம்ப கோவம் வருது. கைல வச்சிருக்கிற பொருட்கள் அந்த மாதிரி நேரத்தில் இரண்டு அடி தூரம் வரை பறக்குது.டிவி ரிமோட் , டம்ளர் , தட்டு எல்லாம் இதுல அடங்கும் . இதை எப்படி மாத்துறதுன்னு தான் தெரியலை. என்னக்கு கோவம் வந்த நான் பப்பு கிட்ட , உன் கூட பேசமாட்டேன் " கா" அப்படின்னு சொல்லிட்டு திரும்பி உட்காருவேன் . இப்போ எல்லாம் எனக்கு முன்னாடி அவ " கா" சொல்லிட்டு சிரிக்கிறா ஹம்.. அப்புறம் நமக்கு எங்கேர்ந்து கோவம் வருது ? நல்லா என்னை தாஜா பண்ண கத்துகிட்டா..
 
அதே மாதிரி எல்லா சாமான் மேலயும் நிக்க ட்ரை பண்றா. சின்ன டம்ளர் முதல் , அவளோட ட்ரம்ஸ் ,குட்டி கப் , வாளி, தட்டு  இப்டி எல்லாத்து  மேலயும் .. அதுலேயே ride  வேற... ஆனா கீழ விழாம இருக்க ரொம்ப நல்லா balance  பண்றா.
 
கொஞ்சம் கொஞ்சம் jump  கூட வருது. அப்பா மேல ஏறி நின்னு , நான் உட்கார்ந்து இருந்த என் தொடை மேல ஏறி நின்னு அப்டியே கீழ
குதிக்கிறா....
சில சமயம் ரொம்ப ஜாலியா இருந்த ஒரே "சுத்தி சுத்தி" தான்... இல்லேன்னா என்னை யானை போ போ அப்டின்னு  ஒரே வெரட்டு ....  அவ வேகத்துக்கு ஈடு குடுத்து சில சமயம் நம்மாலேயே ஓட முடியலை.. ஹையோ வயசாயிருச்சூ :-(

November 23, 2010

18 Months

ஹையோ பப்பு எவ்ளோ வளந்துட்டா ..
இப்போ எல்லாம் மாடி படி எல்லாம் பிடிக்காமலே இறங்குறா.சில சமயம் பிடிச்சுக்காம ஏறவும் செய்றா.
Play  Area    போனா  எல்லா பெரிய சறுக்கு மேலயும் கொஞ்சம் கூட பயம் இல்லாம ஏறி விளையாடுறா .நேத்து வீட்டுலேர்ந்து ஒரு 2 பிளாக் தள்ளி உள்ள Play  Area  போனோம் . அங்கே இவளை போலவே ஒரு குட்டி பாப்பா. பெயர் நந்திதா.ரொம்ப சீக்கிரம் பிரெண்ட் ஆய்ட்டா. அவளோட பந்து விளையாட்டு என்ன.., ஸ்டாரும் , நிலவும்  காட்றது என்ன ... ஒரே கொண்டாட்டம் தான்.... ரெண்டு மூணு புது வார்த்தைகள் கூட கத்துகிட்டா . come , Go ,Slow  இப்டி நான் பேசுற எல்லா வார்த்தைகளையும் அந்த குட்டி பொண்ணு கிட்ட சொல்றா.. She  is  5 months elder than mithu. But still மித்து  சறுக்குல ஏற   பயப்படுற அவளை     கை பிடிச்சி கூட்டிகிட்டு போறா... பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...

November 22, 2010

மித்ரா.. பெயர் பிறந்த கதை

எனக்கு  முதல் குழந்தை பெண் வேணும்னு ரொம்ப ஆசை... இங்கே(சிங்கப்பூர்)    5 ஆவது மாத ஸ்கேன்லேயே பெண் குழந்தை தான்னு Dr சொல்லிட்டாங்க....ஆனாலும்  எனக்கும் சிவாவுக்கும்  குழந்தை பிறக்கும் முன்னே பெயர் தெரிவு செய்வதில் அவ்ளோ ஈடுபாடு இல்லை...இதோ எப்போ வரும் வரும்னு  மே 26 ம் வந்துச்சு. என் குட்டி தேவதை என் கையில வந்தாச்சு..... மருத்துவமனை  விட்டு வெளிய வரப்போ பதிவேட்டில் கூட பெயர் எழுதாமலேயே வந்தோம். அவர்கள் 20  நாளுக்குள் வந்து பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றார்கள்.  11 ஆவது நாள்ல வீட்ல பூஜை ... அப்போ கூட   திருப்தியான பெயர் எதுவும் கிடைக்கலை... வலையில் தேடி, நண்பர்கள் கிட்ட கேட்டு.. ஹ்ம்ம் எதுவும் அமையலை...   எங்களுக்கு பெயர் வந்து சின்னதா , நல்ல   தமிழ் பெயரா இருக்கனும் ஆசை .  18 ஆவது நாள்... ராத்திரி தூங்க போகும் முன்னாடி ஒரு 3  பெயர் தெரிவு செய்து வைத்து விட்டு மறுநாள்  காலை ஏதாவது ஒன்றை முடிவு செய்வோம்னு சொல்லிட்டு தூங்கியாச்சு.
 
 ராத்திரி கனவில்  என் குட்டியை நான் மித்ரானு கூப்பிட்டு   கொஞ்சுற மாதிரி ,  கொஞ்சம் வளந்துட்ட பின்னாடி மித்து அது செய் , மிது இப்படினு நான் பாப்பா  கிட்ட பேசுற மாதிரி தோணுச்சு அதுவரைக்கும் அவளை நாங்க ரெண்டு பேருமே அம்முன்னு தான் கூப்டுட்டு இருந்தோம் .. காலையில எழுந்த பின்னாடியும் கனவுல நடந்தது , பேசினது  எல்லாம் அப்டியே நெனெப்பு இருந்துச்சு..எனக்கும் மித்ரா' ங்கிற பெயர் ரொம்ப பிடிச்சது .. சரின்னு சிவா கிட்ட சொன்ன அவர் வேணாம்னும்         சொல்லலை   , வேணும்னும் சொல்லலை.. சரி இன்னும் நல்ல பேரா   பாக்கலாம்னு நெட்ல தேட ஆரம்பிச்சோம்.. எனக்கோ அந்த பேரே மனசுல நிக்கிது ... சரின்னு இன்னும் ரெண்டு பெயரை செலக்ட் பண்ணி அது கூட மித்ரா பெயரும்  சேத்து குலுக்கி போட்டு எங்க அம்மாவை விட்டு எடுக்க விட்டோம் ... ஆஹா வந்தது என் மனசுக்கு பிடிச்ச பெயர்...
 
பெயருக்கேத்த மாதிரியே மித்ரா கூட எல்லார்கிட்டயும் நல்ல நட்புடன் இருக்கா

November 18, 2010

மித்துவின் கை வண்ணம்

போன வாரம் ஒருநாள்  மித்துக்கு பீட்ரூட் சாதம்    பண்ணலாம்னு கட் பண்ணேன். தோலை சீவி தூக்கி போடும் போது சரி இதை வச்சி பப்புக்கு கலர் பண்ண முதல் தடவையா சொல்லி குடுக்கலாம்னு தோணிச்சு. தோலை    பேப்பேர்ல வச்சி எடுத்திட்டு இருக்கும் போது பப்பு  கையில எல்லாம் கலர் ஆச்சு ... சரின்னு கை முழுக்க கலர் பண்ணி அதையும் அச்சா பதிச்சு வச்சாச்சு . அவளுக்கு ரொம்ப சந்தோசம் . ரொம்ப enjoy பண்ணி விளையாண்டா....
 
 
So மித்துவின் கை வண்ணம்

சளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே!

சளித்தொல்லைக்கு நல்ல மருந்து....

சளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே!

November 16, 2010

முதல் புகைப்படம்

எனக்கோ  குழந்தை பிறந்தவுடன்  புகைப்படம்  எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. அனால் கர்ப்ப காலத்திலேயே சிவா கண்டிப்பா கூடாதுன்னு சொல்லிட்டார்.. நான் கூட சரி பாப்பா  பிறந்தவுடனே பேசி சரி பண்ணிடலாம்னு நெனெச்சேன்..  ஆனா  முடியலையே.... அதுனால மித்தாவோட முதல் புகைப்படம் அவளது 11 ஆவது நாள்ள தான் எடுத்தோம் ...

November 8, 2010

Fun walk @ சிங்கப்பூர்

Fun  walk @ சிங்கப்பூர்
அழகான ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தில் Marina Bay  என்கிற இடத்தில ( பிரபலமான சிங்கம்  சிலை இருக்கும் இடம் )  4  KM  நடைபயணம் .. இரவு 7  மணி முதல் 8 .30  வரை  
நாங்க இடத்தை தேடி கண்டுபிடிச்சு போகவே 6  மணி ஆயிடுச்சி .. லேசான தூறல் வேற .. போன வுடனே சின்னதா நம்ம ஊர் பெப்சி ஜூஸ்( பழைய ஐஸ் ) குச்சி மாதிரி ஈதோ கைல தந்துட்டாங்க  சரி ஏதோ ஜூஸ் தான் போல ன்னு திறக்க ட்ரை பண்ணா ஒண்ணுமே முடியலை .. சரின்னு விட்டு கொஞ்சம் அந்த மழையிலேய அப்படியே சுத்தி பாக்க போனோம் ... இந்த மாதிரி இடத்துல நிறைய stalls  போட்டு இருப்பாங்க. எப்பவும் போல கையில ரெண்டு பலூன வாங்கி வச்சிக்கிட்டு குடுத்த ஐஸ்கிரீம் , Popcorn ,பஞ்சுமிட்டாய் coupenukku இடத்தை  தேடி கண்டுபிடிச்சி வாங்கினோம் .. அப்புறம் குழந்தையோட இருக்கிறவங்களை தேடி தேடி toys  story      பொம்மை குடுத்தாங்க.. அதுல ஒன்னுக்கு ரெண்டு பொம்மை வாங்கியாச்சு..  
கொஞ்சம் இருட்ட ஆரம்பிச்சப்புறம் தான் தெரிஞ்சது முன்னாடி குடுத்தது ஜூஸ் இல்லை , லைட் ன்னு .. அதை லேசா உடைக்கிற மாதிரி பண்ணா கலர் கலரா லைட் எரியுது .. குட்டிக்கு ஒரே குஷி தான் .அப்புறம் warm  up  முடிச்சி நடக்க ஆரம்பிச்சோம் .. நல்ல வேலை மழை இல்லை ... குட்டி கிட்டத்தட்ட பாதிக்கு பாதி நடந்தா.. அதே நாள்ல அங்க ILIGHT  ன்னு  இன்னொரு event  வேற.. So  நிறைய லைட்  செட்டிங்க்ஸ் .. பாக்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு..
 பாதி தூரத்துல நான் கொஞ்சம்  டயர்ட் ஆகிட்டேன் ... சிவா வும் குட்டியும் ஜாலியா நடந்தாங்க .... முடிஞ்சு வந்து ஐஸ்கிரீம் வாங்கினா, இந்த குட்டி பொண்ணு என்னகும், அவங்க அப்பாக்கும் தராம அவளே ரெண்டையும்  கேட்டு, பாதி    கொட்டி, வழிஞ்சி  சாப்டு முடிச்சா..


எல்லாம் முடிச்சி  வீட்டுக்கு கிளம்ப 9 .30 PM  ஆயிடுச்சு.. சரி ன்னு இன்னொரு friend குடும்பமும் சேந்து டாக்ஸி ல போலாம்னு முடிவு பண்ணை டாக்ஸி பிடிச்சு ஏறி உக்கார்ந்தா அவன் குட்டீஸ் எல்லாம் கணக்குல எடுத்து 6  பேர் ஈத மாட்டேன்னு சொல்லிட்டான்(இங்க ரொம்ப strict . 4  பேர் மட்டும் தான் ஒரு டாக்ஸி ல ஏற முடியும் ) ஒரு வழியா வீடு வந்து சேர  11 ஆய்டுச்சி

ஆப்பிள் I 4

அப்பாவோட iphone   தான் இப்போ குட்டிக்கு நல்ல பொழுதுபோக்கு .. பாட்டு பாட்டுன்னு கேட்டு  ஒரே அடம்... ஆனா போட்டு தந்துட்டா ஒரே குஷி ரொம்ப ரசிச்சி  பாக்குறா.. யானை யானை  , Bha Bha Black  Sheep  இப்படி சில பாட்டுகள் இப்போ  favorite  ஆயிடுச்சி

வம்பு பண்ணா சமாதானப்படுத்த ,ட்ரைன்ல போகும்போது கொஞ்ச நேரம் இப்படி நல்லா use  ஆகுது

காப்பியும் ஹாப்பியும்

இந்த மாசம் மித்து புதுசா கத்துகிட்ட வார்த்தைகள்...
Happy , கத்தி, flight ,..... இப்படி  நிறைய.............
 
கிட்டத்தட்ட எல்லா வார்த்தைகளும் பேச ஆரம்பிச்சுட்டா ... இப்போ கொஞ்சம் வாக்கியங்கள் பேச முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கா

November 2, 2010

தீபாவளி @ சிங்கப்பூர்

நம்ம ஊரை விட சிங்கப்பூரில்  தீபாவளி கொஞ்சம் நல்லாவே கொண்டாடுற மாதிரி தெரியுது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில்,நடிகைகளின் பேட்டிகளில், உலக தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக ....இப்படி  மட்டுமே  போய் கொண்டு இருக்கிறது  நம்ம தலை முறை தீபாவளி.....
 
இங்கே லிட்டில் இந்தியா என்னும் பகுதி முழுக்க முழுக்க நம்ம சென்னை மாதிரியே இருக்கும். என்ன கொஞ்சம் முன்னேறிய சென்னை
.. :-( .இந்த பகுதியில் தீபாவளிக்கு  ஒரு மாதம் முன்னாடியே தெரு முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்காக நிறைய தற்காலிக கடைகளும்  வந்துடும். இங்க எவ்ளோ தான் கூட்டம் இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். நம் பண்பாட்டை பறைசாற்றும் நிறைய கலை நிகழ்ச்சிகள், கைவினை பொருட்கள் ,இப்படி  கண்ணுக்கும்  மனசுக்கும் விருந்தாகும் நிகழ்ச்சிகள் நிறைய காணலாம்  . இங்கே உள்ள தமிழ் தொலைக்காட்சி  வசந்தமிலும் கூட சினிமா  சார்ந்த  நிகழ்சிகளுக்கு மட்டும் அல்லாமல் நிறைய பொது நிகழ்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும்...