இந்த செய்தியை வாசிக்கும் போதே மனசு வலிக்கிறது .
.100 கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் நாட்டில் அடிப்படை சுகாதார வசதிகளை கூட மேம்படுத்த யோசிக்க கூட செய்யாத அரசாங்கம் :-( .
தமிழ் நாட்டில் ஏன் சென்னையிலேயே கூட எனக்கு தெரிந்தே இன்னும் எத்தனையோ சேரி பகுதிகளில் ஒழுங்கான கழிப்பிட வசதிகள் இல்லை. ஆனால் அவர்கள் கையில் மின்னும் செல் போன். இதற்கு முக்கிய காரணம் செல் போன் விளம்பரங்கள் கடைகோடி மக்களை சென்று சேர்ந்த அளவுக்கு கூட சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு சேரவில்லை. இதற்கு சில தொலைகாட்சி விளம்பரங்களே சாட்சி.( காசநோய்க்கான அரசு சுகாதார விளம்பரம்- ரொம்ப மொக்கை) ...
நம் மக்களுக்கு அடிப்படையிலேயே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மிக குறைவு.
சிங்கப்பூரின் சுத்தம் நாம் நன்கு அறிந்த ஒன்றே...ஆனால் இங்கேயும் "லிட்டில் இந்தியா" எனப்படும் இந்தியர்கள் மிக அதிகம் புழங்கும் பகுதியில் உள்ள கழிப்பிடங்களின் சுத்தம் மற்றும் மேற்பார்வை மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது மிக மோசம் .
இங்கே எந்த ஒரு பொது நிகழ்ச்சி நடை பெற்றாலும் அங்கே தற்காலிக கழிப்பிட வசதி கண்டிப்பாக இருக்கும் . ஆனால் நம் ஊரிலோ "கடல் அலை" போல் தொண்டர் படை திரண்டது என்று பெருமை பேசும் கட்சி பொது கூட்டங்களில் கூட அந்த வசதிகளை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.கூட்டம் நடக்கும் இடத்தில அருகில் உள்ள கட்டடங்களின் சுவர்களின் நிலைமை மிக பரிதாபம். ...
.இதை நான் வெறும் ஒப்பீடுக்காக மட்டும் சொல்லவில்லை.. என்று மாறும் என் சகோதரனனின் நிலைமை என்ற ஏக்கத்திலும் தான்
No comments:
Post a Comment