Pages

December 1, 2010

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா.

                         எனக்கு  தாலாட்டு  பாடுற வாய்ப்பு 6  ஆவது படிக்கும் பொது கிடைச்சிருச்சு .. தப்பா எடுத்துக்காதீங்க ... எங்க பக்கத்துக்கு வீட்டு குட்டி பையன் வினோத் பெரும்பாலும் குளிக்கும் நேரம் , இரவு 10  to  காலை 7  தவிர மத்த எல்லா நேரமும் எங்க வீட்ல தான் ... இப்போ மாதிரி அப்போ ஸ்கூல் விட்டு டியூஷன் , அந்த கிளாஸ் , இந்த கிளாஸ் எல்லாம் கிடையாதே... ஸ்கூல் 4 .15  க்கு விட்டா 4 .25  க்கு நான் வீட்ல இருப்பேன் ...அதுக்கு அப்புறம் முழுக்க முழுக்க வினோத் கூட தான் ...
                         எங்க அம்மா ரொம்ப நல்லா பழைய பாட்டு எல்லாம் பாடுவாங்க .. அதுவும் முக்கியமா S .வரலக்ஷ்மி பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் ... So  எல்லா தாலாட்டு பாட்டும் அவங்க கிட்ட கத்து கிட்டது தான்..வினோத் வளந்த  பின்னாடி , அவன் தம்பி அருண், எதிர் வீடு துர்க்கா குட்டி ,அப்புறம் என் அக்கா பசங்க சிபி , அபி இப்படி என் தாலாட்டை கேட்டு தூங்கின குழந்தைகள் நிறைய..
                       மித்துக்கு ரொம்ப சின்ன வயசிலேயே , சொல்ல போனா  இரண்டாம் நாள் காலையிலேயே பாட ஆரம்பிச்சுட்டேன் ...  
அவ வயித்துல இருக்கிறப்போவே அவ கூட நான் நிறைய பேசுவேன்.. அதுனால என் குரல் அவளுக்கு பழக்கமாகி இருக்கும்னு  ஒரு நம்பிக்கை தான்.
நான் பாடுற சில தாலாட்டுகள் :
ஆராரோ ஆரிராரோ லேர்ந்து  ஆரம்பிச்சு,
அன்பே கண்ணுறங்கு , ஆருயிரே நீயுறங்கு  
அப்டின்னு நானே பாடுற சில பாடல்கள் அவளுக்கு ரொம்ப இஷ்டம் ( நாமலே நெனெச்சு பாட வேண்டியது தான் )
இதை தவிர ... ஆல் டைம் favourite  Songs
  • அன்னை மடி மெத்தையடி ....(கற்பகம் )
  • கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று ( கேளடி கண்மணி)
  • நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் ( மறுபடியும்)
  • பூவே செம்பூவே உன் வாசம் வரும் ( சொல்ல துடிக்கிது மனசு )
  • சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி ...(S .வரலக்ஷ்மி -வீரபாண்டிய கட்டபொம்மன் )--ரொம்ப பிடிக்கும்
  • இந்த பச்சை கிளிக்கொரு செவந்தி பூவாலே தொட்டிலை கட்டி வைத்தேன்...(நீதிக்கு தலை வணங்கு )
  • கண்ணன் வருவான் கதை சொல்லுவான் ..
  • நீல வண்ண கண்ணா வாடா...
  • ஆயர் பாடி மாளிகையில்
 மித்துவை தூங்க வைக்க சில சமயம் ஒரு பாட்டே போதும் ..ஆனா பல சமயம் ரெண்டு மூணு ரவுண்டு எல்லா பாட்டும் பாடினாலும்  தூங்காம கேட்டுகிட்டே இருப்பா .. நமக்கு தான் தூக்கம் கண்ணை சுத்தும் ....
தாலாட்டு  சில  குறிப்புகள்:
                               தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம்.

                    ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.
                    தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போஜி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருட்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.

உதவி : விக்கி பீடியா

No comments:

Post a Comment