மார்கழி மாசம் ஆரம்பிச்சாச்சு... காலேண்டர் பாத்தவுடனே ஒரே ஊர் ஞாபகம் தான்...
கொட்டுற பனியில 4 மணிக்கு எழுந்து தெரு அடைச்சி போடுற கோலமும் ,
தூரமா கோவில்லேர்ந்து வரும் ஆயர்பாடி மாளிகையில் பாட்டும்
சில்லுனு பச்சை தண்ணியில குளிக்கிற சுகமும்,
ஹர்மொனியமும்,மிருதங்கமும் ஒலிக்கும் பஜனையும் , சுண்டலும் ,
வைகுண்ட ஏகாதெசிக்கு பக்கத்துக்கு வீட்டில் விடிய விடிய அலறும் ஸ்பீக்கரும் ,ராத்திரி முழுக்க ஆடும் பரமபதமும் ,பல்லாங்குழியும்
இப்படி நிறைய ஆஹா க்கள் ..
ஆனா இப்போ இந்த அபார்ட்மென்ட் வாழ்க்கையில.
கேட் தாண்டி கலர் ஸ்டிக்கர் கோலம் ...
கம்ப்யூட்டர்ரில் கர்நாடக சங்கீதம் ...
என் பொண்ணுக்கு பல்லாங்குழியும் பரமபதமும் ,கோலமும் தெரியாமலே போயிடுமோனு தோணுது .....
No comments:
Post a Comment