சென்ற வரம் புதன் கிழமை இரவு அங்கே சுற்றி பாக்க போனோம். 2008 இல் பார்த்ததை விட இன்னும் சிறப்பாக செய்து இருந்தார்கள் .
கடந்த 27 வருடமாக இந்த வண்ண விளக்கு அலங்காரங்கள் இங்கே நடைபெறுகின்றன.
இந்த வருடம் நவம்பர் 20 அன்று மாலை அதிபர் திரு .நாதன் அவர்களால் விளக்குகள் ஒளியூட்ட பட்டன .
நிறைய இடங்களில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பொம்மைகள், ஏராளமான சிறப்பு நடன ,இசை நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலத்திற்கு நடக்கும்.
நாங்க போன அன்னைக்கு "nanyang polytechnic " மாணவர்கள் சிறப்பான இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் . அப்புறம் நிறைய இடங்களில் கிறித்மஸ் மரங்கள் அழகாக ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன . கூடம் அதிகம் இருந்தாலும் மித்து இந்த அலங்காரம் எல்லாம் பாத்து ரொம்ப சந்தோஷமா விளையாண்டா .
No comments:
Post a Comment