Pages

December 8, 2010

 சிங்கப்பூரில்  என்னை கவர்ந்த சில விஷயங்கள்....
அங்கே நம் சிங்கார சென்னை இந்த அடை மழையில்  படும் பாட்டை பார்க்கும் போது இதுவரை இங்கே என் கண்ணுக்கு படாத பல விஷயங்கள் இப்போ  என்னை  ரொம்பவே ஆச்சர்ய படுத்துது...  அவற்றுள் சில
 
1 . சுத்தம் .
சிங்கப்பூரின் சுத்தம் பற்றி எல்லாருக்கும் தெரியும் . ஆனால் அதை பராமரிக்க  அரசாங்கம் எடுத்துகொள்ளும் முயற்சி ரொம்பவே பாராட்டத்தக்கது.எல்லா தெருக்களிலும்  கண்டிப்பாக நடை பாதையும் ,பாதாள    சாக்கடையும் இருக்கும்.
 கடை வீதிகளோ, உணவகமோ, பொது மக்கள் கூடும் இடமான பேரூந்து நிறுத்தம் , இரயில் நிலையம் , கடற்கரையோ... கையில் குப்பையோடு நம் யோசிக்கும்  முன்னே நம் கண்ணில் குப்பை தொட்டிகள் படும்.

2 .மருத்துவமனைகள் :
இங்கே அரசு மருத்துவமனைகளின் சுத்தமும் கவனிப்பும் நம்மூர் தனியார் மருத்துவமனையை  விஞ்சி விடும்.

3 . விளையாட்டு :
இங்கே குழந்தைகளின் விளையாட்டுக்கும் , பெரியவர்களின் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் அதிகம். இரண்டு அல்லது மூன்று ப்ளோக்குகள் நடுவே ஒரு விளையாடும் இடமும் ( சின்ன சறுக்கு , சி-சா), உடற்பயிற்சி செய்யும் இடமும் கண்டிப்பாக இருக்கும்.
மத்தியானம் 12 மணி வெயிலில் கூட யாராவது ஒன்று , இரண்டு பேர் jogging செய்வதை தெருக்களில் பார்க்கலாம் .
நான் முதல் நான் சிங்கப்பூர் வந்த அன்று காலை 7 மணி அளவில் ஒரு வயதான பாட்டி ( 70 க்கும் குறையாமல் இருக்கும்  ) , பிளாக் கீழே  தனியாக நின்று கை வீசி ஆட்டி கொண்டே , ஏதோ பேசி  கிட்டே இருந்தாங்க .. நான்  கூட எதோ மன நிலை சரி இல்லாதவங்கன்னு  நினைச்சுட்டேன் .. ஆனா ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிஞ்சது  அவங்க செஞ்சது ஒரு வகை உடல் பயிற்சி - TAIJI  அப்டின்னு ...

4  . நூலகம் :
இங்கே உள்ள அரசாங்க நூலகங்கள் என்னை போல வாசிப்பு பிரியர்களுக்கு ஒரு நல்ல வர பிரசாதம் ....நிறைய தமிழ் , ஆங்கில புத்தகங்கள் , குழந்தைகளுக்கான புத்தகங்கள் ன்னு நிறைய இருக்கும். முக்கியமான விஷயம் நிறைய இடங்கள்ள இருக்கும் . நம்ம அரசியல் வாதிங்க மாதிரி தமிழ் வளர்ப்போம் வளர்ப்போம் ன்னு வெறும் சேருமே பேசிக்கிட்டே இருந்து , ஊருக்கு ஒரு நல்ல நூலகம் கூட  வைக்க மாட்டாங்க ....
5   பூங்காக்கள் : இங்கே நிறைய இயற்கை  பூங்காக்கள்(Natural  Parks) அரசாங்கமே  நல்ல வகையில் பராமரிச்சுகிட்டு   இருக்கு...

இப்டி இன்னும் நிறைய சொல்லிகிட்டே போகலாம்.. இன்னும் சொல்றேன்

No comments:

Post a Comment