பப்பு இப்போ எல்லாம் பயங்கர அப்பா செல்லம் ஆயிட்டே வர்றா... எந்த நொறுக்கு தீனியுமே அவ எனக்கு குடுக்க மாட்டா ...
ஒரு ரெண்டு மாசம் முன்னாடி முதல் தடவையா அவளுக்கு மாதுளம் பழம் உரிச்சு குடுத்தேன். உரிக்கும் போதே அதோட முத்துக்கள் பார்க்க அவளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு .. ஆசையா சாப்பிட்டா. ஆனா நன் கேட்டபோ கையை இழுத்துக்கிட்டு திரும்பிட்டா .. கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நான் கேட்டும் தரலை . ஆனா அவங்க அப்பா வந்து கேட்ட வுடனே எடுத்து ஊட்டி விட்டுட்டா.. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு ... ஹ்ம் என்ன பண்ண முடியும் ?
இதோ நேத்து கூட பழம் சாப்பிட்டோம் .. இப்போ எல்லாம் கேட்டா கையை திருப்பிக்கிறது இல்லை ... தள்ளி நின்னு என்னை பார்த்து ஒற்றை விரல் காட்டி "நோ" னு சொல்றா...ம் ..ஆனா அவங்க அப்பாக்கு மட்டும் கை நிறைய கிடைக்குது .... என்ன கொடுமை சார் இது...
indha ponungala eppadi thaan veena nama pinnadia suthera madhiri irukum but ...atlest mithu kutty no nu sollera enga Aadhirai....if w ask any thing which she likes she says po..... :)
ReplyDeleteBut it is good....