Pages

April 21, 2014

எதிர்பார்க்கும் புது வரவு...

கடந்த 9 மாதங்களாகஉடலிலும் மனதிலும் பலவித கஷ்டங்கள்... இதை அனைத்தையும் சிவா , மித்ராவின் துணையோடு கடந்து வந்தாகி விட்டது ..
ஒரு நல்ல தோழியாய், தாயாய் மித்ரா பல விதத்திலும் என்னை பாத்துகிட்டா...
நாலரை வயதில் என்னையே சில சமயம் வியக்க வைக்கும் பொறுமையும் புரிதலும்
.. கொடுத்ததை சாப்பிட்டு ... என் உடல் நிலையை புரிந்து கொண்டு .. அதற்கேற்ற வாறு தன் நேரத்தையும் விளையாட்டையும் மாற்றி கொண்டு.. ஹப்பா எப்டி நிறைய ...

இதோ இன்னும் சில நாட்கள் .... என்னை விட மித்ரா தான் தன் தம்பிக்காகவோ /தன்கைக்காகவோ  காத்திருக்கிறாள்

ஆரம்பத்தில் விஷயம் கேள்விப்பட்ட அனைவரும் மித்ராவிடம் கேட்கும் ஒரே கேள்வி  "உனக்கு தம்பி வேணுமா ? தங்கச்சி வேணுமா?"
எனக்கோ அவளிடம் இந்த கேள்வியும் /பதிலும் மனதிற்குள் எந்த எதிர்பார்ப்பையும் , பின்னால் ஏமாற்றத்தையும் தந்து விட கூடாதே என்ற கவலை

முதல் முறை மருத்துவரிடம் சென்று வந்த உடனே ...அவளிடம்
பாப்பா , அம்மா வயித்தில ஒரு குட்டி பாப்பா இருக்கு ... ஆனா அது தம்பியா, தங்கசியான்னு சாமிக்கு மட்டும் தான் தெரியும் ... அதனால யாரு உன்கிட்ட அப்டி கேட்டாலும் " எனக்கு எந்த பாப்பா இருந்தாலும் ஓகே " அப்டின்னு தான் சொல்லணும் .. ன்னு சொல்லிட்டேன் .... அப்போலேர்ந்து இதோ இன்னைக்கு வரைக்கும் யார் இந்த கேள்வி அவளை கேட்டாலும் ...."அம்மா வயித்துல என்ன பாப்பா இருக்குன்னு யாருக்கும் தெரியாது , எனக்கு எந்த பாப்பா இருந்தாலும் ஓகே தான் " அப்டி ன்னு தான் சொல்லுவா... அவங்க ஸ்கூல் ஆன்டி கிட்ட கூட அப்டியே சொல்லி இருக்கா ....
யார் எவ்ளோ வற்புறுத்தி கேட்டாலும் தம்பியா , தங்கையான்னு சொல்றது இல்லை

மித்ரா உன்னை நினைச்சு நிஜம்மாவே பெருமை படுறேன் ...