Pages

September 9, 2012

சலங்கை இட்டாள் ஒரு மாது



மித்ரா விற்கு வியாழன் அன்று அவளுடைய நடன பள்ளியில் சலங்கை குடுத்தார்கள் , வகுப்பில் சேர்க்கும் போதே சீக்கிரம் குழந்தைகல்லு சலங்கை குடுத்து விடுவோம்ன்னு அவர் ஆசிரியை சொன்னார். அதற்கான காரணமும் எனக்கு பிடித்து இருந்தது ... அந்த சலங்கையில் ஒலியே குழந்தைகளுக்கு ஆர்வத்தையும் , பயிற்சி எடுக்கும் போது கவனத்தையும் கொடுக்கும்   என்பது  தான் அது ...
பழக ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளே மித்ரா என்னாகும் சலகை வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விட்டால் . வகுப்பில் எல்லாரும் கட்டி ஆடும் போது அவளுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.. போன வாரம் ரொம்ப கேட்டு அடம் பண்ண ஆரம்பிச்சுட்டா .. ஆன்டி கிட்ட கேட்டால் , அவள் அளவு சலங்கை வந்துடுச்சு வந்து வாங்கிகோங்க அப்டின்னு சொன்னங்க .. வியாழன் அன்று நானும் மித்ரா கூட வகுப்புக்கு போய் பணம் குடுத்து சலங்கை வாங்கிட்டேன் .
அதை அவர்களே பூஜையில் வைத்து மித்ரா கையால் எடுக்க சொல்லி அவங்களே கட்டி விட்டாங்க ... அந்த நிமிஷம் மித்ராவின் மன நிலை எப்படி இருந்திருக்குமோ தெரியலை .. ஆனால் நான் , சந்தோஷத்தின் எல்லையில் தான் இருந்தேன் ... என் சிறு வயசு ஆசை , ஏக்கம் எல்லாமே இன்று என் கண் முன்னால் நிறைவேறியது ..
 இனி , அவளை அந்த ஆர்வத்தில் இருந்து திசை திருப்பாமல் , வளர்க்க வேண்டிய பொறுப்பு அதிகரித்து உள்ளது ...

 

நானும் என் தையல் இயந்திரமும்



இந்த வலை பதிவினை மித்ராவிற்காக ஆரம்பித்து இப்போ என்னை பற்றியும் கொஞ்சம் சேர்க்க ஆரம்பிச்சிட்டேன்
விஷயம் என்னன்னா என் பல வருஷ கனவு போன ஞாயிறு அன்று தான் நிறைவேறியது .. உஷா தையல் இயந்திரம் வாங்கிட்டேனே ...
போன ஞாயிறு அன்று வாங்கியது இன்னைக்கு தான் பிரிக்க போறேன் . வீட்டில் வைக்க சரியான உயரத்தில் எதுவும் இல்லாததால் , டேபிள் ஆர்டர் குடுத்து இருந்தேன் , அது வியாழன் அன்று தான் வந்தது ..  வெள்ளிகிழமை  எதுவும் செய்ய முடியலை ... செனி அன்று வழக்கம் போல வெளியே சுத்தியாச்சு ..
கொஞ்சம் அறிவு , நிறைய ஆர்வம் . இது தான் இப்போதைய நிலைப்பாடு ... நிறைய வலைபூக்கள் தான் என் குரு ..

இனிமே மித்ராவிற்காக நிறைய தைக்க வேண்டும் , என் துணிகளை நானே தைக்க கற்றுக்கொள்ள வேண்டும் ... ம்ம் இன்னும் நிறைய .

எல்லாவற்றுக்கும் நேரத்தை திறமையாக நிரவகம் செய்ய வேண்டும் , வேலை ,  வீட்டு நிர்வாகம் ,மித்ரவிற்கான நேரம் ,  சுய தொழில் அப்புறம் .. என் பொழுதுபோக்கு இப்படி எல்லாவற்றுக்கும் நேரத்தை , ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்...

September 3, 2012

தைக்கும் தை , தைகே தை

இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு . நடுவில் , கொஞ்சம் வேலை , அதிக பயணம் எல்லாம் சேர்ந்து என் நேரத்தை திருடி விட்டது ...
மீண்டும்  எனக்கான நேரத்தை கண்டுபிடித்து விட்டேன் ...
ஒரு இரண்டு மாசமா மித்ரா பரதநாட்டியம் வகுப்புக்கு போய்ட்டு இருக்கா. அதுனால வாரத்தில் இரண்டு நாள் குட்டி பொண்ணு பிஸி . ஆனா நாள் முழுக்க , வரம் முழுக்க ஒரே தைக்கும் தை , தைகே தை தான் . இன்னும் அவளுக்கு வகுப்பில்  ரொம்ப பயிற்சி இல்லை , ஆனாலும் மத்தவங்களுக்கு சொல்லி குடுக்குறதை பார்த்தே நல்ல ஆடுறா . எனக்கு அவளை ரொம்பவும் சிரம படுத்த விருப்பம் இல்லை . சும்மா அந்த சூழலுக்கு பழகட்டுமே அப்டின்னு தான் சேத்து விட்டேன். ஆனா இப்போ  அவள் ஈடுபாட்டை பக்க சந்தோஷமா இருக்கு