இந்த வலை பதிவினை மித்ராவிற்காக ஆரம்பித்து இப்போ என்னை பற்றியும் கொஞ்சம் சேர்க்க ஆரம்பிச்சிட்டேன்
விஷயம் என்னன்னா என் பல வருஷ கனவு போன ஞாயிறு அன்று தான் நிறைவேறியது .. உஷா தையல் இயந்திரம் வாங்கிட்டேனே ...
போன ஞாயிறு அன்று வாங்கியது இன்னைக்கு தான் பிரிக்க போறேன் . வீட்டில் வைக்க சரியான உயரத்தில் எதுவும் இல்லாததால் , டேபிள் ஆர்டர் குடுத்து இருந்தேன் , அது வியாழன் அன்று தான் வந்தது .. வெள்ளிகிழமை எதுவும் செய்ய முடியலை ... செனி அன்று வழக்கம் போல வெளியே சுத்தியாச்சு ..
கொஞ்சம் அறிவு , நிறைய ஆர்வம் . இது தான் இப்போதைய நிலைப்பாடு ... நிறைய வலைபூக்கள் தான் என் குரு ..
இனிமே மித்ராவிற்காக நிறைய தைக்க வேண்டும் , என் துணிகளை நானே தைக்க கற்றுக்கொள்ள வேண்டும் ... ம்ம் இன்னும் நிறைய .
எல்லாவற்றுக்கும் நேரத்தை திறமையாக நிரவகம் செய்ய வேண்டும் , வேலை , வீட்டு நிர்வாகம் ,மித்ரவிற்கான நேரம் , சுய தொழில் அப்புறம் .. என் பொழுதுபோக்கு இப்படி எல்லாவற்றுக்கும் நேரத்தை , ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்...
No comments:
Post a Comment