எனக்கு முதல் குழந்தை பெண் வேணும்னு ரொம்ப ஆசை... இங்கே(சிங்கப்பூர்) 5 ஆவது மாத ஸ்கேன்லேயே பெண் குழந்தை தான்னு Dr சொல்லிட்டாங்க....ஆனாலும் எனக்கும் சிவாவுக்கும் குழந்தை பிறக்கும் முன்னே பெயர் தெரிவு செய்வதில் அவ்ளோ ஈடுபாடு இல்லை...இதோ எப்போ வரும் வரும்னு மே 26 ம் வந்துச்சு. என் குட்டி தேவதை என் கையில வந்தாச்சு..... மருத்துவமனை விட்டு வெளிய வரப்போ பதிவேட்டில் கூட பெயர் எழுதாமலேயே வந்தோம். அவர்கள் 20 நாளுக்குள் வந்து பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றார்கள். 11 ஆவது நாள்ல வீட்ல பூஜை ... அப்போ கூட திருப்தியான பெயர் எதுவும் கிடைக்கலை... வலையில் தேடி, நண்பர்கள் கிட்ட கேட்டு.. ஹ்ம்ம் எதுவும் அமையலை... எங்களுக்கு பெயர் வந்து சின்னதா , நல்ல தமிழ் பெயரா இருக்கனும் ஆசை . 18 ஆவது நாள்... ராத்திரி தூங்க போகும் முன்னாடி ஒரு 3 பெயர் தெரிவு செய்து வைத்து விட்டு மறுநாள் காலை ஏதாவது ஒன்றை முடிவு செய்வோம்னு சொல்லிட்டு தூங்கியாச்சு.
ராத்திரி கனவில் என் குட்டியை நான் மித்ரானு கூப்பிட்டு கொஞ்சுற மாதிரி , கொஞ்சம் வளந்துட்ட பின்னாடி மித்து அது செய் , மிது இப்படினு நான் பாப்பா கிட்ட பேசுற மாதிரி தோணுச்சு அதுவரைக்கும் அவளை நாங்க ரெண்டு பேருமே அம்முன்னு தான் கூப்டுட்டு இருந்தோம் .. காலையில எழுந்த பின்னாடியும் கனவுல நடந்தது , பேசினது எல்லாம் அப்டியே நெனெப்பு இருந்துச்சு..எனக்கும் மித்ரா' ங்கிற பெயர் ரொம்ப பிடிச்சது .. சரின்னு சிவா கிட்ட சொன்ன அவர் வேணாம்னும் சொல்லலை , வேணும்னும் சொல்லலை.. சரி இன்னும் நல்ல பேரா பாக்கலாம்னு நெட்ல தேட ஆரம்பிச்சோம்.. எனக்கோ அந்த பேரே மனசுல நிக்கிது ... சரின்னு இன்னும் ரெண்டு பெயரை செலக்ட் பண்ணி அது கூட மித்ரா பெயரும் சேத்து குலுக்கி போட்டு எங்க அம்மாவை விட்டு எடுக்க விட்டோம் ... ஆஹா வந்தது என் மனசுக்கு பிடிச்ச பெயர்...
பெயருக்கேத்த மாதிரியே மித்ரா கூட எல்லார்கிட்டயும் நல்ல நட்புடன் இருக்கா
No comments:
Post a Comment