நம்ம ஊரை விட சிங்கப்பூரில் தீபாவளி கொஞ்சம் நல்லாவே கொண்டாடுற மாதிரி தெரியுது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில்,நடிகைகளின் பேட்டிகளில், உலக தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக ....இப்படி மட்டுமே போய் கொண்டு இருக்கிறது நம்ம தலை முறை தீபாவளி.....
இங்கே லிட்டில் இந்தியா என்னும் பகுதி முழுக்க முழுக்க நம்ம சென்னை மாதிரியே இருக்கும். என்ன கொஞ்சம் முன்னேறிய சென்னை
.. :-( .இந்த பகுதியில் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னாடியே தெரு முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்காக நிறைய தற்காலிக கடைகளும் வந்துடும். இங்க எவ்ளோ தான் கூட்டம் இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். நம் பண்பாட்டை பறைசாற்றும் நிறைய கலை நிகழ்ச்சிகள், கைவினை பொருட்கள் ,இப்படி கண்ணுக்கும் மனசுக்கும் விருந்தாகும் நிகழ்ச்சிகள் நிறைய காணலாம் . இங்கே உள்ள தமிழ் தொலைக்காட்சி வசந்தமிலும் கூட சினிமா சார்ந்த நிகழ்சிகளுக்கு மட்டும் அல்லாமல் நிறைய பொது நிகழ்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும்...
No comments:
Post a Comment