Fun walk @ சிங்கப்பூர்
அழகான ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தில் Marina Bay என்கிற இடத்தில ( பிரபலமான சிங்கம் சிலை இருக்கும் இடம் ) 4 KM நடைபயணம் .. இரவு 7 மணி முதல் 8 .30 வரை
நாங்க இடத்தை தேடி கண்டுபிடிச்சு போகவே 6 மணி ஆயிடுச்சி .. லேசான தூறல் வேற .. போன வுடனே சின்னதா நம்ம ஊர் பெப்சி ஜூஸ்( பழைய ஐஸ் ) குச்சி மாதிரி ஈதோ கைல தந்துட்டாங்க சரி ஏதோ ஜூஸ் தான் போல ன்னு திறக்க ட்ரை பண்ணா ஒண்ணுமே முடியலை .. சரின்னு விட்டு கொஞ்சம் அந்த மழையிலேய அப்படியே சுத்தி பாக்க போனோம் ... இந்த மாதிரி இடத்துல நிறைய stalls போட்டு இருப்பாங்க. எப்பவும் போல கையில ரெண்டு பலூன வாங்கி வச்சிக்கிட்டு குடுத்த ஐஸ்கிரீம் , Popcorn ,பஞ்சுமிட்டாய் coupenukku இடத்தை தேடி கண்டுபிடிச்சி வாங்கினோம் .. அப்புறம் குழந்தையோட இருக்கிறவங்களை தேடி தேடி toys story பொம்மை குடுத்தாங்க.. அதுல ஒன்னுக்கு ரெண்டு பொம்மை வாங்கியாச்சு..
கொஞ்சம் இருட்ட ஆரம்பிச்சப்புறம் தான் தெரிஞ்சது முன்னாடி குடுத்தது ஜூஸ் இல்லை , லைட் ன்னு .. அதை லேசா உடைக்கிற மாதிரி பண்ணா கலர் கலரா லைட் எரியுது .. குட்டிக்கு ஒரே குஷி தான் .அப்புறம் warm up முடிச்சி நடக்க ஆரம்பிச்சோம் .. நல்ல வேலை மழை இல்லை ... குட்டி கிட்டத்தட்ட பாதிக்கு பாதி நடந்தா.. அதே நாள்ல அங்க ILIGHT ன்னு இன்னொரு event வேற.. So நிறைய லைட் செட்டிங்க்ஸ் .. பாக்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு..
பாதி தூரத்துல நான் கொஞ்சம் டயர்ட் ஆகிட்டேன் ... சிவா வும் குட்டியும் ஜாலியா நடந்தாங்க .... முடிஞ்சு வந்து ஐஸ்கிரீம் வாங்கினா, இந்த குட்டி பொண்ணு என்னகும், அவங்க அப்பாக்கும் தராம அவளே ரெண்டையும் கேட்டு, பாதி கொட்டி, வழிஞ்சி சாப்டு முடிச்சா..
எல்லாம் முடிச்சி வீட்டுக்கு கிளம்ப 9 .30 PM ஆயிடுச்சு.. சரி ன்னு இன்னொரு friend குடும்பமும் சேந்து டாக்ஸி ல போலாம்னு முடிவு பண்ணை டாக்ஸி பிடிச்சு ஏறி உக்கார்ந்தா அவன் குட்டீஸ் எல்லாம் கணக்குல எடுத்து 6 பேர் ஈத மாட்டேன்னு சொல்லிட்டான்(இங்க ரொம்ப strict . 4 பேர் மட்டும் தான் ஒரு டாக்ஸி ல ஏற முடியும் ) ஒரு வழியா வீடு வந்து சேர 11 ஆய்டுச்சி
No comments:
Post a Comment