போன வாரம் ஒருநாள் மித்துக்கு பீட்ரூட் சாதம் பண்ணலாம்னு கட் பண்ணேன். தோலை சீவி தூக்கி போடும் போது சரி இதை வச்சி பப்புக்கு கலர் பண்ண முதல் தடவையா சொல்லி குடுக்கலாம்னு தோணிச்சு. தோலை பேப்பேர்ல வச்சி எடுத்திட்டு இருக்கும் போது பப்பு கையில எல்லாம் கலர் ஆச்சு ... சரின்னு கை முழுக்க கலர் பண்ணி அதையும் அச்சா பதிச்சு வச்சாச்சு . அவளுக்கு ரொம்ப சந்தோசம் . ரொம்ப enjoy பண்ணி விளையாண்டா....
புத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து
November 18, 2010
November 16, 2010
முதல் புகைப்படம்
எனக்கோ குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. அனால் கர்ப்ப காலத்திலேயே சிவா கண்டிப்பா கூடாதுன்னு சொல்லிட்டார்.. நான் கூட சரி பாப்பா பிறந்தவுடனே பேசி சரி பண்ணிடலாம்னு நெனெச்சேன்.. ஆனா முடியலையே.... அதுனால மித்தாவோட முதல் புகைப்படம் அவளது 11 ஆவது நாள்ள தான் எடுத்தோம் ...
November 8, 2010
Fun walk @ சிங்கப்பூர்
Fun walk @ சிங்கப்பூர்
அழகான ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தில் Marina Bay என்கிற இடத்தில ( பிரபலமான சிங்கம் சிலை இருக்கும் இடம் ) 4 KM நடைபயணம் .. இரவு 7 மணி முதல் 8 .30 வரை
நாங்க இடத்தை தேடி கண்டுபிடிச்சு போகவே 6 மணி ஆயிடுச்சி .. லேசான தூறல் வேற .. போன வுடனே சின்னதா நம்ம ஊர் பெப்சி ஜூஸ்( பழைய ஐஸ் ) குச்சி மாதிரி ஈதோ கைல தந்துட்டாங்க சரி ஏதோ ஜூஸ் தான் போல ன்னு திறக்க ட்ரை பண்ணா ஒண்ணுமே முடியலை .. சரின்னு விட்டு கொஞ்சம் அந்த மழையிலேய அப்படியே சுத்தி பாக்க போனோம் ... இந்த மாதிரி இடத்துல நிறைய stalls போட்டு இருப்பாங்க. எப்பவும் போல கையில ரெண்டு பலூன வாங்கி வச்சிக்கிட்டு குடுத்த ஐஸ்கிரீம் , Popcorn ,பஞ்சுமிட்டாய் coupenukku இடத்தை தேடி கண்டுபிடிச்சி வாங்கினோம் .. அப்புறம் குழந்தையோட இருக்கிறவங்களை தேடி தேடி toys story பொம்மை குடுத்தாங்க.. அதுல ஒன்னுக்கு ரெண்டு பொம்மை வாங்கியாச்சு..
கொஞ்சம் இருட்ட ஆரம்பிச்சப்புறம் தான் தெரிஞ்சது முன்னாடி குடுத்தது ஜூஸ் இல்லை , லைட் ன்னு .. அதை லேசா உடைக்கிற மாதிரி பண்ணா கலர் கலரா லைட் எரியுது .. குட்டிக்கு ஒரே குஷி தான் .அப்புறம் warm up முடிச்சி நடக்க ஆரம்பிச்சோம் .. நல்ல வேலை மழை இல்லை ... குட்டி கிட்டத்தட்ட பாதிக்கு பாதி நடந்தா.. அதே நாள்ல அங்க ILIGHT ன்னு இன்னொரு event வேற.. So நிறைய லைட் செட்டிங்க்ஸ் .. பாக்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு..
பாதி தூரத்துல நான் கொஞ்சம் டயர்ட் ஆகிட்டேன் ... சிவா வும் குட்டியும் ஜாலியா நடந்தாங்க .... முடிஞ்சு வந்து ஐஸ்கிரீம் வாங்கினா, இந்த குட்டி பொண்ணு என்னகும், அவங்க அப்பாக்கும் தராம அவளே ரெண்டையும் கேட்டு, பாதி கொட்டி, வழிஞ்சி சாப்டு முடிச்சா..
எல்லாம் முடிச்சி வீட்டுக்கு கிளம்ப 9 .30 PM ஆயிடுச்சு.. சரி ன்னு இன்னொரு friend குடும்பமும் சேந்து டாக்ஸி ல போலாம்னு முடிவு பண்ணை டாக்ஸி பிடிச்சு ஏறி உக்கார்ந்தா அவன் குட்டீஸ் எல்லாம் கணக்குல எடுத்து 6 பேர் ஈத மாட்டேன்னு சொல்லிட்டான்(இங்க ரொம்ப strict . 4 பேர் மட்டும் தான் ஒரு டாக்ஸி ல ஏற முடியும் ) ஒரு வழியா வீடு வந்து சேர 11 ஆய்டுச்சி

ஆப்பிள் I 4
அப்பாவோட iphone தான் இப்போ குட்டிக்கு நல்ல பொழுதுபோக்கு .. பாட்டு பாட்டுன்னு கேட்டு ஒரே அடம்... ஆனா போட்டு தந்துட்டா ஒரே குஷி ரொம்ப ரசிச்சி பாக்குறா.. யானை யானை , Bha Bha Black Sheep இப்படி சில பாட்டுகள் இப்போ favorite ஆயிடுச்சி
வம்பு பண்ணா சமாதானப்படுத்த ,ட்ரைன்ல போகும்போது கொஞ்ச நேரம் இப்படி நல்லா use ஆகுது

காப்பியும் ஹாப்பியும்
இந்த மாசம் மித்து புதுசா கத்துகிட்ட வார்த்தைகள்...
Happy , கத்தி, flight ,..... இப்படி நிறைய.............
கிட்டத்தட்ட எல்லா வார்த்தைகளும் பேச ஆரம்பிச்சுட்டா ... இப்போ கொஞ்சம் வாக்கியங்கள் பேச முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கா
November 2, 2010
தீபாவளி @ சிங்கப்பூர்
நம்ம ஊரை விட சிங்கப்பூரில் தீபாவளி கொஞ்சம் நல்லாவே கொண்டாடுற மாதிரி தெரியுது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில்,நடிகைகளின் பேட்டிகளில், உலக தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக ....இப்படி மட்டுமே போய் கொண்டு இருக்கிறது நம்ம தலை முறை தீபாவளி.....
இங்கே லிட்டில் இந்தியா என்னும் பகுதி முழுக்க முழுக்க நம்ம சென்னை மாதிரியே இருக்கும். என்ன கொஞ்சம் முன்னேறிய சென்னை
.. :-( .இந்த பகுதியில் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னாடியே தெரு முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்காக நிறைய தற்காலிக கடைகளும் வந்துடும். இங்க எவ்ளோ தான் கூட்டம் இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். நம் பண்பாட்டை பறைசாற்றும் நிறைய கலை நிகழ்ச்சிகள், கைவினை பொருட்கள் ,இப்படி கண்ணுக்கும் மனசுக்கும் விருந்தாகும் நிகழ்ச்சிகள் நிறைய காணலாம் . இங்கே உள்ள தமிழ் தொலைக்காட்சி வசந்தமிலும் கூட சினிமா சார்ந்த நிகழ்சிகளுக்கு மட்டும் அல்லாமல் நிறைய பொது நிகழ்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும்...
Subscribe to:
Posts (Atom)