இன்னைக்கு எங்க கல்யாண நாள். நேத்து டிரஸ் எடுக்க கடைக்கு போனப்போ , மித்து கிட்ட , பப்பு நாளைக்கு அம்மாக்கும் , அப்பாக்கும் கல்யாண நாள் டா, நீ ஹாப்பி வெட்டிங் டே சொல்லுவியா ? ன்னு கேட்டேன்? , ( அவளுக்கு ஏற்கனவே , பர்த்டே , ஹாப்பி பர்த்டே எல்லாம் தெரியுமே )
அப்போ மித்ராக்கு வெட்டிங் டே? என்னக்கு வெட்டிங் டே இல்லையான்னு கேட்டா...
பாப்பா வளைந்து பெரிய பொண்ணு ஆனா வுடனே பாப்பாக்கு கூட கல்யாணம் நடக்குமா , அப்புறம் வெட்டிங் டே வரும் ன்னு சொன்னேன் . அவளுக்கு இப்போ கல்யாணம் , செத்து போய்ட்டாங்க , பாப்பா பொறந்துடுச்சு எல்லாம் புரியுது .... அதனால் மழுப்ப விரும்பாமல் அப்படியே உள்ளதை சொன்னேன் ...
ஹாய் அப்போ பாப்பாக்கு அப்புறம் வரும் , நாளைக்கு அம்மாக்கு, அப்பாக்கு வெட்டிங் டே ன்னு சந்தோசம் ஆய்ட்டா.
முக்கியமான விஷயம் இன்னைக்கு காலையில தான் .. எழுபினப்போ நான் நேத்து வாங்கின டிரஸ் போட்டு இருந்தேன் , உடனே அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு... ஹாய் , இன்னைக்கு அம்மாக்கு ஹாப்பி வெட்டிங் டே அப்டின்னு கத்துனா..
ஒரு அம்மாக்கு வேற என்ன சந்தோசம் இருக்கு முடியும் ?
மிக சிறந்த திருமண நாள் பரிசு .. :-)
No comments:
Post a Comment