Pages

December 31, 2010

Happy New Year 2011

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
.

December 27, 2010

சிங்கப்பூரில் கிறிஸ்த்மஸ் கொண்டாடங்கள்

இங்கே நிறைய இடங்களில் அழகான ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்து இருப்பர் . அதில் மிக பிரபலமான இடம் "Orchid  Road  ".நம்ம ஊர் தி.நகர் மாதிரி இருந்தாலும் அந்த கூடத்திலும் ஒரு ஒழுங்கு இருக்கும்.
 சென்ற வரம் புதன் கிழமை இரவு அங்கே சுற்றி பாக்க போனோம். 2008  இல் பார்த்ததை விட இன்னும் சிறப்பாக செய்து இருந்தார்கள் .
கடந்த 27  வருடமாக இந்த வண்ண விளக்கு அலங்காரங்கள் இங்கே நடைபெறுகின்றன. 
 


இந்த வருடம் நவம்பர் 20   அன்று மாலை அதிபர் திரு .நாதன் அவர்களால்  விளக்குகள் ஒளியூட்ட  பட்டன .  
 நிறைய இடங்களில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பொம்மைகள், ஏராளமான  சிறப்பு நடன ,இசை நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலத்திற்கு நடக்கும்.
நாங்க போன அன்னைக்கு "nanyang polytechnic " மாணவர்கள் சிறப்பான இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் . அப்புறம் நிறைய இடங்களில் கிறித்மஸ் மரங்கள் அழகாக ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன . கூடம் அதிகம் இருந்தாலும் மித்து இந்த அலங்காரம் எல்லாம் பாத்து ரொம்ப சந்தோஷமா  விளையாண்டா .

December 22, 2010

மன்னிப்பு- மனுஷ்யபுத்திரன்

இன்று மனுஷ்யபுத்திரனின் மன்னிப்பு கவிதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது ...
சில வரிகள் மனதை  தொட்டது..


மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனை



இதை நான் மித்துகிட்டே கூட பாத்துட்டேன். சில சமயம் குறும்புகளுக்கு என் கோபத்தை விட என் அமைதி அவளை ரொம்ப உறுத்தும் . ஓடி வந்து கொஞ்சி என்னை சமாதானப்படுத்துவா ....




பி.கு : ஆனால் இந்த தண்டனை தர மிகுந்த மனவலிவும்,கருணையும் எல்லையில்லா அன்பும் வேண்டும்

December 19, 2010

ஆஹா மார்கழி

மார்கழி மாசம் ஆரம்பிச்சாச்சு... காலேண்டர் பாத்தவுடனே ஒரே ஊர் ஞாபகம் தான்...
 கொட்டுற பனியில 4  மணிக்கு எழுந்து தெரு அடைச்சி போடுற  கோலமும் ,
தூரமா கோவில்லேர்ந்து வரும் ஆயர்பாடி மாளிகையில் பாட்டும்
சில்லுனு பச்சை தண்ணியில   குளிக்கிற சுகமும்,
ஹர்மொனியமும்,மிருதங்கமும் ஒலிக்கும் பஜனையும் , சுண்டலும் ,
வைகுண்ட ஏகாதெசிக்கு பக்கத்துக்கு வீட்டில் விடிய விடிய அலறும் ஸ்பீக்கரும் ,ராத்திரி முழுக்க ஆடும்  பரமபதமும் ,பல்லாங்குழியும்
 
இப்படி நிறைய ஆஹா க்கள் ..
 
ஆனா இப்போ இந்த அபார்ட்மென்ட் வாழ்க்கையில.
கேட் தாண்டி கலர் ஸ்டிக்கர் கோலம் ...
கம்ப்யூட்டர்ரில்  கர்நாடக சங்கீதம் ... 
 
என் பொண்ணுக்கு பல்லாங்குழியும் பரமபதமும் ,கோலமும் தெரியாமலே போயிடுமோனு தோணுது .....
 
 
 
 

December 12, 2010

My First One ,Two ,Three

இப்போ மித்து படிச்சுட்டு இருக்கிற புக் :
My  First One ,Two ,Three 
 
இந்த   புக்ல நிறைய படம் கலர் கலரா இருக்கு . அதனால  குட்டிக்கு இந்த புக் ரொம்ப பிடிச்சிருக்கு.
இப்போ புக்ல  படம் பாக்குறது படம் பார்த்து பேர் சொல்றது எல்லாம் பிடிக்க ஆரம்பிச்சுருக்கு ...
Butterfly ,Boat ,Horse , Denosar  இப்டி நிறைய வார்த்தைகள் கத்துகிட்டா...
குட்டி புக் படிக்கிற ஸ்டைலே தனி... குட்டி சேர்ல உட்கார்ந்துட்டு , குப்புற படுத்துகிட்டு , இல்லை தலையனையில நேரா படுத்துகிட்டு , இப்டி என்னையும்  சிவாவையும் பாத்து ரொம்ப நல்லா imitate  பண்றா. 
 
சில சமயம் எங்க புக் எல்லாம் படிப்பா... பாலகுமாரன்  தாத்தா.. ரா.கி ரங்கராஜன்  மாமா, சினேகிதி  புக்ல நிறைய அத்தைகள்  இப்டி நிறைய சொந்தம் கொண்டடுவா

18 -19 Months

இந்த மாசம் அம்மு நிறைய புது வார்த்தைகளை ரொம்ப தெளிவா பேச ஆரம்பிச்சுட்டா....கால் கீழ  வந்து நின்னு  "தூக்கு" ன்னு அவ சொல்ற அழகே தனி...அப்புறம் " வேணாம்" ன்னு ரொம்ப தெளிவா சொல்றா... ம் சாப்பாடு தான் .. வேற என்னத்தை சொல்வா?
போன்ல கொஞ்சம் நல்ல பேசுறா..அவங்க அப்பாகிட்ட fine ,மம் மம் , Bye  எல்லாம் நல்லா சொல்றா
 
அப்புறம் Crayans ,வாட்டர்  கலர்  இதெல்லாம் கொஞ்சம் ஆவலோட செய்றா...  
புது சைக்கிள்ள அம்மா இல்லை அப்பா கூட ஜாலியா ரவுண்டு அடிக்கிறா...
அவளுக்கு வாங்கியிருக்கிற குட்டி chair ல உட்காருவதை தவிர மத்த எல்லாத்துக்கும் use  பண்றா...அதை தள்ளிகிட்டே  போறது,, அது மேல ஏறி நிக்கிறது, கோவம் வந்தா தூக்கி போட இப்டி நிறைய use  ஆகுது  

December 11, 2010

குழந்தைகளா ?களிமண் பொம்மைகளா?

 
 
ரொம்ப  நாளா என் மனசை உறுத்திகிட்டே இருந்த ஒரு விஷயம் ... இன்றைக்கு வேறு ஒருத்தரின்  எழுத்துக்கள் மூலமாக ... 
 
 
புகழ் என்றால் தொலைக்காட்சியில், திரைப்படங்களில் தோன்றவேண்டும்.முகம் தெரியவேண்டும்.ரோட்டில் போவோர் வருவோர் உங்கள் குழந்தைகளின் முகம் பார்த்து இளிக்கவேண்டும். தாங்கள்தான் அவர்களின் பெற்றோர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டும். பெரும் பணம் குறுகிய காலத்திலேயே சம்பாதிக்க வேண்டும். இதுமட்டுமே உங்களின் மனதில் லட்சியமாய் இருக்கிறது. அவர்கள் புகழ் சின்னமாக்கப்படுவதின் (branding) மூலம் நீங்கள் பேர் பெற விரும்புவது ஒருவகையான அடிமைத்தொழில் என்றே கருதத்தோன்றுகிறது.  

குழந்தைகள் உங்கள் வழியே உருவானவர்கள், உங்களுக்காக உருவானவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வார்த்தைகளை நீங்கள் அறிந்ததுண்டா? குழந்தைகளுக்கான உலகம் (அவர்கள் எதிர்காலம் அல்ல) பற்றி ஏதாவது அறிவீர்களா நீங்கள். எப்பொழுது பார்த்தாலும் அவர்களை மதிப்பெண்கள் பெறவும், பரிசுகளைக் குவிக்கவும், புகழ்களை அள்ளிக்கொண்டு வரவுமே நிர்பந்திக்கும் நீங்கள் உருவாக்குவது மனிதம் நிறைந்த மனிதர்களை அல்ல, எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய நிறைய பணம்  அல்லது புகழ் சம்பாதித்து தரும் இயந்திரங்களை.  

சிறு வயதில் தாங்கள் இப்படியெல்லாம் வியாபாரநோக்கோடு வளர்க்கப்பட்டதை உண்ர்ந்து பிள்ளைகள் நாளை உங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்பொழுது நீங்கள் கையாலாகவதராக கூனிக் குறுகி நிற்கவேண்டியிருக்கும்.  உங்கள் பேராசையை அவர்கள் லட்சியமாக விதைப்பதற்கு எதிர்காலத்திற்கான வித்து என்பது மனசாட்சியை தர்க்கம் செய்து ஏமாற்றுவது.  இங்கு ஹன்னா அரெண்ட் கூறும் ஓர் உளவியல் விளக்கத்தை குறிப்பிடுகிறேன் “காலத்தினூடாக நீடித்து இருப்பது பூமியில் இறப்பற்ற வாழ்வு” இருப்பு குறித்த அச்சமே வாரிசு உருவாக்கத்திலும் அவர்கள் மூலம் முத்திரைப் பதிக்கும் செயல்களிலும் (ஆணாதிக்க கண்ணோட்டத்துடனும், அவர்களின் நலனுக்காகவும்) ஈடுபட காரணமாய் அமைகிறது.  இந்த உளவியல் காரணங்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் முதலாளிகள். குழந்தை வளர்ப்பை நீங்கள் அடிமைத்தனமாய் மாற்றும்பொழுது பெற்றோர்களாகிய நீங்கள் அக்குழந்தைகளுக்கு முதலாளிகள்.

எப்பாடுபட்டாவது தன் பிள்ளையை எல்லோருக்கும் தெரிந்தவராக ஆக்கும் முயற்சியில் இன்று பெற்றோர்களாகிய நீங்கள் முழு முனைப்புடன் ஈடுபடுகிறார்கள். ஆக இதில் குழந்தைகள் நலனைவிட பெற்றோர்களின் பேராசையே ஓங்கி இருக்கிறது.  அதன் விளைவு குழந்தைகள் என்ற பெயரில் நீங்கள் வளர்ப்பது பொருளாதார அடிமைகளையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெற்றோர்களே குழந்தைகளுக்கான நலம் என்பதில் அவர்களுக்கு நீங்கள் அறிமுகம் செய்யும் அணைத்துமே பணம், புகழ், வசதி வாய்ப்புக்களை பெறுவதற்கான ஒன்றாய் மட்டுமே இருக்கிறதே ஏன்? பெரும்பாலும் இவை நடுத்தர, பணக்கார படிநிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான மேடைகளாக உள்ளனவே? தெருவுக்குத் தெரு குழந்தைகளுக்கான பல்வேறு பயிற்ச்சி திட்டங்கள் செயல்படுகின்றன. குழந்தைகள் மூளை வளர்ச்சி குறித்து வரைபடம் வரைந்து படங்கள் காட்டி ஏதேதோ சொல்லி அச்சுறுத்துகிறார்கள். இதன் விளைவு காலையில் பள்ளி, வீடு திரும்பியவுடன் மற்ற வகுப்புகள். இயந்திரங்களுக்கு கூட சுமை (load)  பொருக்கும் அளவு என்று ஒன்று உள்ளது ஆனால் குழந்தைகளுக்கு?

இது அறிவை வளர்க்கும் பயிற்சிகள் என்றால் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கும் அவை தேவை தானே. அப்படி அது மிக மிக அவசியம் என்றால் அரசாங்கமே அவற்றைப் பாட திட்டத்தில் சேர்ப்பார்கள் தானே? ஊடக நிகழ்ச்சிகளுக்காக 24 மணி நேரமும் சிந்திக்கும் பெற்றோர்களே இதைப்பற்றி யோசிக்க நேரம் கிடைக்குமா உங்களுக்கு?

பொருளாதாரத்தை மட்டுமே குறிவைக்கும் பண்டங்களை சந்தைப்படுத்த ஊடகங்கள் தேவை. அவ்விளம்பரங்களைப் பெற ஊடகங்கள் T.R.P*  என்ற ஒரு தர மதிப்பீட்டில் முன்னணியில் இருக்கவேண்டும் அதற்கு மக்களும் பங்குபெறும் நிகழ்ச்சியாக இருந்தால் நம் முகம், நமக்கு வேண்டியவர் முகம் அதில் தெரிகிறதே என்று வாயைப் பிளந்துக்கொண்டு நாம் பார்க்கச்செய்யும் நிகழ்ச்சிகளே மெய்மை நிகழ்ச்சிகள். அதன் தற்போதைய பலி குழந்தைகள்.  இந்த தரங்கெட்ட செயலுக்கு பெற்றோர்களாகிய நீங்கள்  துணை புரிகிறீர்கள்.

பீட்சாவும், பாஸ்தாவும் அறிந்த உங்கள் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் உண்ணும் ஈ மொய்த்த மிட்டாய்களைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.  தங்கள் பெற்றோரின் பொருளாதார சூழல் அறிந்து அக்குழந்தைகள் அதை உண்டே திருப்திக்கொள்வார்கள். உங்கள் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முத்திரையைச் சொல்லி அப்பொருளை வாங்கிக் கொடுத்தாலே ஆயிற்று என்று அடம் பிடிக்கும். நீங்களும் “என் குழந்தை எது கேட்டாலும் நான் மறுக்க மாட்டேன்” என்று மார்தட்டிக்கொள்ள அதை வாங்கிக்கொடுப்பீர்கள். பின் தொடர்ந்து அது கேக்கப்போகும் பொருட்களுக்காக ஓடி ஓடி உழைப்பீர்கள். வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுப்பதென்பது எதிர்காலத்தில் உங்களை அவர்கள் கைவிட்டுவிடக்கூடாதே என்ற அச்சத்தினால் என்றும் கருதலாம்.  இப்படி எல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்க்கப்படும் நகரக் கலாச்சாரத்தின் பெரிய சாதனை ‘முதியோர் இல்லம்’.  அடியும் உதையும் வாங்கி புழுதிக்கு மத்தியில் வளர்க்கப்படும் ஊர்கலாச்சாரத்தில் முதியோர் இல்லங்களைக் காண்பது அரிது.  ஆனால் அதையும் (இலவச) தொலைக்காட்சிகள் குலைத்துவிடும் ஆபத்து தொலைவில் இல்லை.

இறுதியாக பெற்றோரிடம் சில கேள்விகள்:

  1. பொது மேடைகளில் புகழுக்காய்,காமப் பாடல்களை பெரியவர்களுக்கேற்ற முகபாவனையுடன் உதடுகளை அசைக்கும் உங்களது செல்லக் குழந்தைகளுக்கு அவற்றின் அர்த்தங்களை வரிக்கு வரி விளக்கியதுண்டா?
  2. அச்சிறுமி அல்லது சிறுவனுக்கு பாலியல் கல்வி பற்றி என்றாவது தாங்கள் வகுப்பெடுத்ததுண்டா?
  3. சினிமாப் பாடல் வரிகளை மணப்பாடம் செய்து அக்கதாநாயக மனோபாவத்துடன் வளரும் சிறுவர் பள்ளிகளில் சக சிறுமியை எப்படிப் பார்கிறார்கள் என்று தெரியுமா? (குழந்தைகள் பிற்காலத்தில் பெண்கள் ஆண்கள் மீதும், ஆண்கள் பெண்கள் மீதும்  வைக்கும் பாலியல் பார்வை எவ்வாறு அமையும்?)
  4. உங்களது குழந்தைப் பருவ இச்சைகளை நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
  5. புகழினால் உங்கள் குழந்தைகள் அடையும் இலட்சிய மாதிரி என்ன? அதனால் நீங்கள் அடையும் மனநிறைவை விளக்கமுடியுமா?
  6. இன்று படுக்கையறைப் பாடல்களை மேடையில் பெருமையாய்ப் பாடும் உங்களது குழந்தைகள் நாளை பெரியவர்கள் ஆனதும் அதைப் பதிவு செய்துக் காட்டுவீர்களா?
  7. அப்படிக் காட்டும்பொழுது நீங்களும், உங்களது மகன் அல்லது மகள் அடையும் உணர்ச்சி எவ்வாறு இருக்கும்?
  8. உங்கள் மகன், மகள் மேடையில் பாடும் முனகல் பாடல்களை தெருவிலும் பாட அனுமதிப்பீர்களா..அப்படி அனுமதித்தால் வரும் விளைவுகளை சந்திப்பீர்களா?
  9. குறிப்பாக பெண் குழந்தைகளை கவர்ச்சி உடைகள் அணிந்து காமப் பாடல்களை பாட அல்லது அதற்கு ஆட  ஊக்கப்படுத்தும் பெற்றோர்களே..அக்குழந்தை வளர்ந்து தெருவில் செல்லும் பொழுதும் அதே போண்ற உடை அணிய அனுமதிப்பீர்களா? (அதை நீங்கள் மறுக்கும் பட்சத்தில் புகழுக்காக அன்று நீங்கள் அனுமதித்தீர்களே என்று உங்கள் மகள் கேட்கக்கூடும்..)
  10. நல்லது கெட்டது என்ற இருமைகளுக்கு மாற்றாய் தவிர்ப்பது,மற்றும் ஒதுக்கப்படவேண்டியது என பலவகை உணர்ச்சிகளை அவர்களுக்கு நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்களா? அவை உள்ளனவென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
  11. உங்களது குழந்தையின் உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பு அதனால் தோன்றும் மன உளைச்சலுக்கு நீங்கள் கூலி கொடுப்பீர்களா?
  12. உங்களைப் போன்ற பெற்றோரால் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல் நிறைந்த மன உளைச்சலுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்வீர்களா?
  13. எல்லாவற்றிர்கும் மேலாய் அவர்கள் உங்கள் குழந்தைகளா இல்லை உங்கள் அடிமைகளா?
  14. ‘சிறுமி பாலியல் பலாத்காரம்’ என்று படிக்கையில் உங்கள் மனவோட்டம் எப்படி இருக்கும்? விளக்கமுடியுமா?
  15. பல்வேறு அரசியல் காரணங்களால் பின்தங்கியுள்ள குழந்தைகளின் நிலையை மாற்றியமைக்க நீங்கள் கொண்டாடும் ஊடகங்களும், நடிகர்களும் செய்துள்ளது என்ன என்பது பற்றி விளக்கமுடியுமா? 
விவாதிப்போம் பெற்றோர்களே.....அவர்கள் நம் குழந்தைகள் அல்லவா.

நன்றி :Face Book

இதில் சில  கேள்விகளுக்கு  விடைகளை நினைத்தாலே பயமாக இருக்கிறது...

December 8, 2010

 சிங்கப்பூரில்  என்னை கவர்ந்த சில விஷயங்கள்....
அங்கே நம் சிங்கார சென்னை இந்த அடை மழையில்  படும் பாட்டை பார்க்கும் போது இதுவரை இங்கே என் கண்ணுக்கு படாத பல விஷயங்கள் இப்போ  என்னை  ரொம்பவே ஆச்சர்ய படுத்துது...  அவற்றுள் சில
 
1 . சுத்தம் .
சிங்கப்பூரின் சுத்தம் பற்றி எல்லாருக்கும் தெரியும் . ஆனால் அதை பராமரிக்க  அரசாங்கம் எடுத்துகொள்ளும் முயற்சி ரொம்பவே பாராட்டத்தக்கது.எல்லா தெருக்களிலும்  கண்டிப்பாக நடை பாதையும் ,பாதாள    சாக்கடையும் இருக்கும்.
 கடை வீதிகளோ, உணவகமோ, பொது மக்கள் கூடும் இடமான பேரூந்து நிறுத்தம் , இரயில் நிலையம் , கடற்கரையோ... கையில் குப்பையோடு நம் யோசிக்கும்  முன்னே நம் கண்ணில் குப்பை தொட்டிகள் படும்.

2 .மருத்துவமனைகள் :
இங்கே அரசு மருத்துவமனைகளின் சுத்தமும் கவனிப்பும் நம்மூர் தனியார் மருத்துவமனையை  விஞ்சி விடும்.

3 . விளையாட்டு :
இங்கே குழந்தைகளின் விளையாட்டுக்கும் , பெரியவர்களின் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் அதிகம். இரண்டு அல்லது மூன்று ப்ளோக்குகள் நடுவே ஒரு விளையாடும் இடமும் ( சின்ன சறுக்கு , சி-சா), உடற்பயிற்சி செய்யும் இடமும் கண்டிப்பாக இருக்கும்.
மத்தியானம் 12 மணி வெயிலில் கூட யாராவது ஒன்று , இரண்டு பேர் jogging செய்வதை தெருக்களில் பார்க்கலாம் .
நான் முதல் நான் சிங்கப்பூர் வந்த அன்று காலை 7 மணி அளவில் ஒரு வயதான பாட்டி ( 70 க்கும் குறையாமல் இருக்கும்  ) , பிளாக் கீழே  தனியாக நின்று கை வீசி ஆட்டி கொண்டே , ஏதோ பேசி  கிட்டே இருந்தாங்க .. நான்  கூட எதோ மன நிலை சரி இல்லாதவங்கன்னு  நினைச்சுட்டேன் .. ஆனா ரொம்ப நாள் கழிச்சு தான் தெரிஞ்சது  அவங்க செஞ்சது ஒரு வகை உடல் பயிற்சி - TAIJI  அப்டின்னு ...

4  . நூலகம் :
இங்கே உள்ள அரசாங்க நூலகங்கள் என்னை போல வாசிப்பு பிரியர்களுக்கு ஒரு நல்ல வர பிரசாதம் ....நிறைய தமிழ் , ஆங்கில புத்தகங்கள் , குழந்தைகளுக்கான புத்தகங்கள் ன்னு நிறைய இருக்கும். முக்கியமான விஷயம் நிறைய இடங்கள்ள இருக்கும் . நம்ம அரசியல் வாதிங்க மாதிரி தமிழ் வளர்ப்போம் வளர்ப்போம் ன்னு வெறும் சேருமே பேசிக்கிட்டே இருந்து , ஊருக்கு ஒரு நல்ல நூலகம் கூட  வைக்க மாட்டாங்க ....
5   பூங்காக்கள் : இங்கே நிறைய இயற்கை  பூங்காக்கள்(Natural  Parks) அரசாங்கமே  நல்ல வகையில் பராமரிச்சுகிட்டு   இருக்கு...

இப்டி இன்னும் நிறைய சொல்லிகிட்டே போகலாம்.. இன்னும் சொல்றேன்

December 2, 2010

குடுக்க மாட்டேன் போ .........

பப்பு இப்போ எல்லாம் பயங்கர அப்பா செல்லம் ஆயிட்டே வர்றா... எந்த நொறுக்கு தீனியுமே அவ எனக்கு  குடுக்க மாட்டா ...
 
 ஒரு ரெண்டு மாசம் முன்னாடி முதல் தடவையா அவளுக்கு மாதுளம் பழம் உரிச்சு குடுத்தேன். உரிக்கும் போதே  அதோட முத்துக்கள் பார்க்க  அவளுக்கு ரொம்ப  பிடிச்சு போச்சு .. ஆசையா சாப்பிட்டா. ஆனா நன் கேட்டபோ கையை இழுத்துக்கிட்டு திரும்பிட்டா .. கிட்ட தட்ட ஒரு மணி நேரம் நான் கேட்டும் தரலை . ஆனா அவங்க அப்பா வந்து கேட்ட வுடனே எடுத்து ஊட்டி விட்டுட்டா.. எனக்கு  வந்த ஆத்திரத்துக்கு ... ஹ்ம் என்ன பண்ண முடியும் ?
 
இதோ நேத்து கூட பழம் சாப்பிட்டோம் .. இப்போ எல்லாம் கேட்டா கையை திருப்பிக்கிறது  இல்லை ... தள்ளி நின்னு என்னை பார்த்து ஒற்றை விரல் காட்டி "நோ" னு சொல்றா...ம்  ..ஆனா அவங்க அப்பாக்கு மட்டும் கை நிறைய கிடைக்குது .... என்ன கொடுமை சார் இது...

இனிய இல்லறம்

இல்லறம் என்பதும் ஒருவித விவசாயம்தான். அதாவது அக்ரிகல்ச்சர்! கணவன் நல்லதாக ஏதாவது சொன்னால், மனைவி உடனே, “எஸ்..ஐ அக்ரி” என்று உடன்பட வேண்டும். மனைவி ஒரு உருப்படியான காரியம் செய்தால், “ஐ அக்ரி” என்று கணவன் ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு பரஸ்பரம் அக்ரி செய்யும் கல்ச்சர் இருக்கும் வீடுகளில் அன்பும் வளமும் பயிராகும்... அதுவே நல்லதொரு தாம்பத்யமாக, பல நூறு ஆண்டுகள் தழைத்து வளரும். எப்படி நம்ப விளக்கம் - டு யூ அக்ரி?

நன்றி :மங்கையர் மலர்

நான் ரசித்தவை

இந்த பகுதியை  ப்ளாக்ல சேக்கணும்னு     ரொம்ப நாளா நெனெச்சிட்டு இருந்தேன்.... என் ரசனைகளை  பின்நாளில் என் செல்ல குட்டியும் தெரிஞ்சுக்கட்டுமே   ....  இனி நான்  படித்து கேட்டு  பார்த்து  ரசித்தவை இங்கே ....

December 1, 2010

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா.

                         எனக்கு  தாலாட்டு  பாடுற வாய்ப்பு 6  ஆவது படிக்கும் பொது கிடைச்சிருச்சு .. தப்பா எடுத்துக்காதீங்க ... எங்க பக்கத்துக்கு வீட்டு குட்டி பையன் வினோத் பெரும்பாலும் குளிக்கும் நேரம் , இரவு 10  to  காலை 7  தவிர மத்த எல்லா நேரமும் எங்க வீட்ல தான் ... இப்போ மாதிரி அப்போ ஸ்கூல் விட்டு டியூஷன் , அந்த கிளாஸ் , இந்த கிளாஸ் எல்லாம் கிடையாதே... ஸ்கூல் 4 .15  க்கு விட்டா 4 .25  க்கு நான் வீட்ல இருப்பேன் ...அதுக்கு அப்புறம் முழுக்க முழுக்க வினோத் கூட தான் ...
                         எங்க அம்மா ரொம்ப நல்லா பழைய பாட்டு எல்லாம் பாடுவாங்க .. அதுவும் முக்கியமா S .வரலக்ஷ்மி பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் ... So  எல்லா தாலாட்டு பாட்டும் அவங்க கிட்ட கத்து கிட்டது தான்..வினோத் வளந்த  பின்னாடி , அவன் தம்பி அருண், எதிர் வீடு துர்க்கா குட்டி ,அப்புறம் என் அக்கா பசங்க சிபி , அபி இப்படி என் தாலாட்டை கேட்டு தூங்கின குழந்தைகள் நிறைய..
                       மித்துக்கு ரொம்ப சின்ன வயசிலேயே , சொல்ல போனா  இரண்டாம் நாள் காலையிலேயே பாட ஆரம்பிச்சுட்டேன் ...  
அவ வயித்துல இருக்கிறப்போவே அவ கூட நான் நிறைய பேசுவேன்.. அதுனால என் குரல் அவளுக்கு பழக்கமாகி இருக்கும்னு  ஒரு நம்பிக்கை தான்.
நான் பாடுற சில தாலாட்டுகள் :
ஆராரோ ஆரிராரோ லேர்ந்து  ஆரம்பிச்சு,
அன்பே கண்ணுறங்கு , ஆருயிரே நீயுறங்கு  
அப்டின்னு நானே பாடுற சில பாடல்கள் அவளுக்கு ரொம்ப இஷ்டம் ( நாமலே நெனெச்சு பாட வேண்டியது தான் )
இதை தவிர ... ஆல் டைம் favourite  Songs
  • அன்னை மடி மெத்தையடி ....(கற்பகம் )
  • கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று ( கேளடி கண்மணி)
  • நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் ( மறுபடியும்)
  • பூவே செம்பூவே உன் வாசம் வரும் ( சொல்ல துடிக்கிது மனசு )
  • சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி ...(S .வரலக்ஷ்மி -வீரபாண்டிய கட்டபொம்மன் )--ரொம்ப பிடிக்கும்
  • இந்த பச்சை கிளிக்கொரு செவந்தி பூவாலே தொட்டிலை கட்டி வைத்தேன்...(நீதிக்கு தலை வணங்கு )
  • கண்ணன் வருவான் கதை சொல்லுவான் ..
  • நீல வண்ண கண்ணா வாடா...
  • ஆயர் பாடி மாளிகையில்
 மித்துவை தூங்க வைக்க சில சமயம் ஒரு பாட்டே போதும் ..ஆனா பல சமயம் ரெண்டு மூணு ரவுண்டு எல்லா பாட்டும் பாடினாலும்  தூங்காம கேட்டுகிட்டே இருப்பா .. நமக்கு தான் தூக்கம் கண்ணை சுத்தும் ....
தாலாட்டு  சில  குறிப்புகள்:
                               தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம்.

                    ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.
                    தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போஜி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருட்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.

உதவி : விக்கி பீடியா

November 28, 2010

World Toilet Day - நவம்பர் 19th

அன்று DC  யில் படித்த செய்தி:700 m mobile users, but only 366 m Indians have toilet access

 இந்த  செய்தியை வாசிக்கும் போதே மனசு வலிக்கிறது .
.100  கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் நாட்டில் அடிப்படை சுகாதார வசதிகளை கூட மேம்படுத்த யோசிக்க கூட செய்யாத  அரசாங்கம் :-( .
 தமிழ் நாட்டில்  ஏன் சென்னையிலேயே கூட  எனக்கு  தெரிந்தே இன்னும் எத்தனையோ சேரி பகுதிகளில் ஒழுங்கான கழிப்பிட வசதிகள் இல்லை. ஆனால் அவர்கள் கையில் மின்னும் செல் போன். இதற்கு முக்கிய காரணம் செல் போன் விளம்பரங்கள் கடைகோடி மக்களை சென்று சேர்ந்த அளவுக்கு கூட சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு சேரவில்லை. இதற்கு சில தொலைகாட்சி விளம்பரங்களே சாட்சி.( காசநோய்க்கான  அரசு சுகாதார  விளம்பரம்- ரொம்ப மொக்கை) ...
நம்  மக்களுக்கு அடிப்படையிலேயே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மிக குறைவு.
 
 சிங்கப்பூரின் சுத்தம் நாம் நன்கு அறிந்த ஒன்றே...ஆனால் இங்கேயும்  "லிட்டில் இந்தியா" எனப்படும் இந்தியர்கள் மிக அதிகம் புழங்கும் பகுதியில் உள்ள கழிப்பிடங்களின் சுத்தம் மற்றும் மேற்பார்வை  மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது மிக மோசம் .  
 
இங்கே எந்த ஒரு பொது நிகழ்ச்சி நடை பெற்றாலும் அங்கே தற்காலிக கழிப்பிட வசதி கண்டிப்பாக இருக்கும் . ஆனால் நம் ஊரிலோ "கடல் அலை" போல் தொண்டர் படை திரண்டது என்று பெருமை பேசும் கட்சி பொது கூட்டங்களில் கூட அந்த வசதிகளை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.கூட்டம் நடக்கும் இடத்தில அருகில் உள்ள கட்டடங்களின் சுவர்களின்  நிலைமை மிக பரிதாபம். ...
 
.இதை நான் வெறும் ஒப்பீடுக்காக மட்டும் சொல்லவில்லை..  என்று மாறும் என் சகோதரனனின்  நிலைமை என்ற ஏக்கத்திலும் தான்  

November 26, 2010

Snaks Time

 
 
குழந்தைகளுக்கு கடையில் வாங்கி குடுக்குற நொறுக்ஸ் விட வீட்லயே வெரைட்டியா செஞ்சு தர்றது தான் நல்லதுன்னு எல்லாருக்குமே தெரியும் . ஆனா இந்த காலத்து பிள்ளைகள் நாம கத்து குடுக்குறதுக்கு முன்னாடியே  எல்லாம் தெரிஞ்சுகிறாங்க...
 
ஆனாலும்  அம்மா கை பக்குவம் மாதிரி வருமா...?
 
 மித்துக்கு பிடிச்ச  சில சத்தான நொறுக்ஸ்
 
1 .இன்ஸ்டன்ட் நொறுக்ஸ்னா அது பொரி தான். ஆனா நல்லாமென்னு சாப்பிடுற குட்டீஸ்க்கு தான் இது சரியாய் வரும்.
2 . அவல்+ சக்கரை+தேங்காய் மிக்ஸ்.
3 .எள்ளு உருண்டை .
4 .கடலை மிட்டாய்.
5  உருளை கிழங்கு fry ( Home Made Potato wedges :-)  )
6.பச்சை பயிறு வடை
7  கேழ்வரகு மாவு பகோடா.
 
 
பி. கு  : இது என்      25   ஆவது  பதிவு...
 

November 24, 2010

மித்துவின் மிரட்டல்

இப்போ எல்லாம் மித்துக்கு ரொம்ப கோவம் வருது. கைல வச்சிருக்கிற பொருட்கள் அந்த மாதிரி நேரத்தில் இரண்டு அடி தூரம் வரை பறக்குது.டிவி ரிமோட் , டம்ளர் , தட்டு எல்லாம் இதுல அடங்கும் . இதை எப்படி மாத்துறதுன்னு தான் தெரியலை. என்னக்கு கோவம் வந்த நான் பப்பு கிட்ட , உன் கூட பேசமாட்டேன் " கா" அப்படின்னு சொல்லிட்டு திரும்பி உட்காருவேன் . இப்போ எல்லாம் எனக்கு முன்னாடி அவ " கா" சொல்லிட்டு சிரிக்கிறா ஹம்.. அப்புறம் நமக்கு எங்கேர்ந்து கோவம் வருது ? நல்லா என்னை தாஜா பண்ண கத்துகிட்டா..
 
அதே மாதிரி எல்லா சாமான் மேலயும் நிக்க ட்ரை பண்றா. சின்ன டம்ளர் முதல் , அவளோட ட்ரம்ஸ் ,குட்டி கப் , வாளி, தட்டு  இப்டி எல்லாத்து  மேலயும் .. அதுலேயே ride  வேற... ஆனா கீழ விழாம இருக்க ரொம்ப நல்லா balance  பண்றா.
 
கொஞ்சம் கொஞ்சம் jump  கூட வருது. அப்பா மேல ஏறி நின்னு , நான் உட்கார்ந்து இருந்த என் தொடை மேல ஏறி நின்னு அப்டியே கீழ
குதிக்கிறா....
சில சமயம் ரொம்ப ஜாலியா இருந்த ஒரே "சுத்தி சுத்தி" தான்... இல்லேன்னா என்னை யானை போ போ அப்டின்னு  ஒரே வெரட்டு ....  அவ வேகத்துக்கு ஈடு குடுத்து சில சமயம் நம்மாலேயே ஓட முடியலை.. ஹையோ வயசாயிருச்சூ :-(

November 23, 2010

18 Months

ஹையோ பப்பு எவ்ளோ வளந்துட்டா ..
இப்போ எல்லாம் மாடி படி எல்லாம் பிடிக்காமலே இறங்குறா.சில சமயம் பிடிச்சுக்காம ஏறவும் செய்றா.
Play  Area    போனா  எல்லா பெரிய சறுக்கு மேலயும் கொஞ்சம் கூட பயம் இல்லாம ஏறி விளையாடுறா .நேத்து வீட்டுலேர்ந்து ஒரு 2 பிளாக் தள்ளி உள்ள Play  Area  போனோம் . அங்கே இவளை போலவே ஒரு குட்டி பாப்பா. பெயர் நந்திதா.ரொம்ப சீக்கிரம் பிரெண்ட் ஆய்ட்டா. அவளோட பந்து விளையாட்டு என்ன.., ஸ்டாரும் , நிலவும்  காட்றது என்ன ... ஒரே கொண்டாட்டம் தான்.... ரெண்டு மூணு புது வார்த்தைகள் கூட கத்துகிட்டா . come , Go ,Slow  இப்டி நான் பேசுற எல்லா வார்த்தைகளையும் அந்த குட்டி பொண்ணு கிட்ட சொல்றா.. She  is  5 months elder than mithu. But still மித்து  சறுக்குல ஏற   பயப்படுற அவளை     கை பிடிச்சி கூட்டிகிட்டு போறா... பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...

November 22, 2010

மித்ரா.. பெயர் பிறந்த கதை

எனக்கு  முதல் குழந்தை பெண் வேணும்னு ரொம்ப ஆசை... இங்கே(சிங்கப்பூர்)    5 ஆவது மாத ஸ்கேன்லேயே பெண் குழந்தை தான்னு Dr சொல்லிட்டாங்க....ஆனாலும்  எனக்கும் சிவாவுக்கும்  குழந்தை பிறக்கும் முன்னே பெயர் தெரிவு செய்வதில் அவ்ளோ ஈடுபாடு இல்லை...இதோ எப்போ வரும் வரும்னு  மே 26 ம் வந்துச்சு. என் குட்டி தேவதை என் கையில வந்தாச்சு..... மருத்துவமனை  விட்டு வெளிய வரப்போ பதிவேட்டில் கூட பெயர் எழுதாமலேயே வந்தோம். அவர்கள் 20  நாளுக்குள் வந்து பெயர் பதிவு செய்ய வேண்டும் என்றார்கள்.  11 ஆவது நாள்ல வீட்ல பூஜை ... அப்போ கூட   திருப்தியான பெயர் எதுவும் கிடைக்கலை... வலையில் தேடி, நண்பர்கள் கிட்ட கேட்டு.. ஹ்ம்ம் எதுவும் அமையலை...   எங்களுக்கு பெயர் வந்து சின்னதா , நல்ல   தமிழ் பெயரா இருக்கனும் ஆசை .  18 ஆவது நாள்... ராத்திரி தூங்க போகும் முன்னாடி ஒரு 3  பெயர் தெரிவு செய்து வைத்து விட்டு மறுநாள்  காலை ஏதாவது ஒன்றை முடிவு செய்வோம்னு சொல்லிட்டு தூங்கியாச்சு.
 
 ராத்திரி கனவில்  என் குட்டியை நான் மித்ரானு கூப்பிட்டு   கொஞ்சுற மாதிரி ,  கொஞ்சம் வளந்துட்ட பின்னாடி மித்து அது செய் , மிது இப்படினு நான் பாப்பா  கிட்ட பேசுற மாதிரி தோணுச்சு அதுவரைக்கும் அவளை நாங்க ரெண்டு பேருமே அம்முன்னு தான் கூப்டுட்டு இருந்தோம் .. காலையில எழுந்த பின்னாடியும் கனவுல நடந்தது , பேசினது  எல்லாம் அப்டியே நெனெப்பு இருந்துச்சு..எனக்கும் மித்ரா' ங்கிற பெயர் ரொம்ப பிடிச்சது .. சரின்னு சிவா கிட்ட சொன்ன அவர் வேணாம்னும்         சொல்லலை   , வேணும்னும் சொல்லலை.. சரி இன்னும் நல்ல பேரா   பாக்கலாம்னு நெட்ல தேட ஆரம்பிச்சோம்.. எனக்கோ அந்த பேரே மனசுல நிக்கிது ... சரின்னு இன்னும் ரெண்டு பெயரை செலக்ட் பண்ணி அது கூட மித்ரா பெயரும்  சேத்து குலுக்கி போட்டு எங்க அம்மாவை விட்டு எடுக்க விட்டோம் ... ஆஹா வந்தது என் மனசுக்கு பிடிச்ச பெயர்...
 
பெயருக்கேத்த மாதிரியே மித்ரா கூட எல்லார்கிட்டயும் நல்ல நட்புடன் இருக்கா

November 18, 2010

மித்துவின் கை வண்ணம்

போன வாரம் ஒருநாள்  மித்துக்கு பீட்ரூட் சாதம்    பண்ணலாம்னு கட் பண்ணேன். தோலை சீவி தூக்கி போடும் போது சரி இதை வச்சி பப்புக்கு கலர் பண்ண முதல் தடவையா சொல்லி குடுக்கலாம்னு தோணிச்சு. தோலை    பேப்பேர்ல வச்சி எடுத்திட்டு இருக்கும் போது பப்பு  கையில எல்லாம் கலர் ஆச்சு ... சரின்னு கை முழுக்க கலர் பண்ணி அதையும் அச்சா பதிச்சு வச்சாச்சு . அவளுக்கு ரொம்ப சந்தோசம் . ரொம்ப enjoy பண்ணி விளையாண்டா....
 
 
So மித்துவின் கை வண்ணம்

சளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே!

சளித்தொல்லைக்கு நல்ல மருந்து....

சளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே!

November 16, 2010

முதல் புகைப்படம்

எனக்கோ  குழந்தை பிறந்தவுடன்  புகைப்படம்  எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. அனால் கர்ப்ப காலத்திலேயே சிவா கண்டிப்பா கூடாதுன்னு சொல்லிட்டார்.. நான் கூட சரி பாப்பா  பிறந்தவுடனே பேசி சரி பண்ணிடலாம்னு நெனெச்சேன்..  ஆனா  முடியலையே.... அதுனால மித்தாவோட முதல் புகைப்படம் அவளது 11 ஆவது நாள்ள தான் எடுத்தோம் ...

November 8, 2010

Fun walk @ சிங்கப்பூர்

Fun  walk @ சிங்கப்பூர்
அழகான ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தில் Marina Bay  என்கிற இடத்தில ( பிரபலமான சிங்கம்  சிலை இருக்கும் இடம் )  4  KM  நடைபயணம் .. இரவு 7  மணி முதல் 8 .30  வரை  
நாங்க இடத்தை தேடி கண்டுபிடிச்சு போகவே 6  மணி ஆயிடுச்சி .. லேசான தூறல் வேற .. போன வுடனே சின்னதா நம்ம ஊர் பெப்சி ஜூஸ்( பழைய ஐஸ் ) குச்சி மாதிரி ஈதோ கைல தந்துட்டாங்க  சரி ஏதோ ஜூஸ் தான் போல ன்னு திறக்க ட்ரை பண்ணா ஒண்ணுமே முடியலை .. சரின்னு விட்டு கொஞ்சம் அந்த மழையிலேய அப்படியே சுத்தி பாக்க போனோம் ... இந்த மாதிரி இடத்துல நிறைய stalls  போட்டு இருப்பாங்க. எப்பவும் போல கையில ரெண்டு பலூன வாங்கி வச்சிக்கிட்டு குடுத்த ஐஸ்கிரீம் , Popcorn ,பஞ்சுமிட்டாய் coupenukku இடத்தை  தேடி கண்டுபிடிச்சி வாங்கினோம் .. அப்புறம் குழந்தையோட இருக்கிறவங்களை தேடி தேடி toys  story      பொம்மை குடுத்தாங்க.. அதுல ஒன்னுக்கு ரெண்டு பொம்மை வாங்கியாச்சு..  
கொஞ்சம் இருட்ட ஆரம்பிச்சப்புறம் தான் தெரிஞ்சது முன்னாடி குடுத்தது ஜூஸ் இல்லை , லைட் ன்னு .. அதை லேசா உடைக்கிற மாதிரி பண்ணா கலர் கலரா லைட் எரியுது .. குட்டிக்கு ஒரே குஷி தான் .அப்புறம் warm  up  முடிச்சி நடக்க ஆரம்பிச்சோம் .. நல்ல வேலை மழை இல்லை ... குட்டி கிட்டத்தட்ட பாதிக்கு பாதி நடந்தா.. அதே நாள்ல அங்க ILIGHT  ன்னு  இன்னொரு event  வேற.. So  நிறைய லைட்  செட்டிங்க்ஸ் .. பாக்கவே ரொம்ப நல்லா இருந்துச்சு..
 பாதி தூரத்துல நான் கொஞ்சம்  டயர்ட் ஆகிட்டேன் ... சிவா வும் குட்டியும் ஜாலியா நடந்தாங்க .... முடிஞ்சு வந்து ஐஸ்கிரீம் வாங்கினா, இந்த குட்டி பொண்ணு என்னகும், அவங்க அப்பாக்கும் தராம அவளே ரெண்டையும்  கேட்டு, பாதி    கொட்டி, வழிஞ்சி  சாப்டு முடிச்சா..


எல்லாம் முடிச்சி  வீட்டுக்கு கிளம்ப 9 .30 PM  ஆயிடுச்சு.. சரி ன்னு இன்னொரு friend குடும்பமும் சேந்து டாக்ஸி ல போலாம்னு முடிவு பண்ணை டாக்ஸி பிடிச்சு ஏறி உக்கார்ந்தா அவன் குட்டீஸ் எல்லாம் கணக்குல எடுத்து 6  பேர் ஈத மாட்டேன்னு சொல்லிட்டான்(இங்க ரொம்ப strict . 4  பேர் மட்டும் தான் ஒரு டாக்ஸி ல ஏற முடியும் ) ஒரு வழியா வீடு வந்து சேர  11 ஆய்டுச்சி

ஆப்பிள் I 4

அப்பாவோட iphone   தான் இப்போ குட்டிக்கு நல்ல பொழுதுபோக்கு .. பாட்டு பாட்டுன்னு கேட்டு  ஒரே அடம்... ஆனா போட்டு தந்துட்டா ஒரே குஷி ரொம்ப ரசிச்சி  பாக்குறா.. யானை யானை  , Bha Bha Black  Sheep  இப்படி சில பாட்டுகள் இப்போ  favorite  ஆயிடுச்சி

வம்பு பண்ணா சமாதானப்படுத்த ,ட்ரைன்ல போகும்போது கொஞ்ச நேரம் இப்படி நல்லா use  ஆகுது

காப்பியும் ஹாப்பியும்

இந்த மாசம் மித்து புதுசா கத்துகிட்ட வார்த்தைகள்...
Happy , கத்தி, flight ,..... இப்படி  நிறைய.............
 
கிட்டத்தட்ட எல்லா வார்த்தைகளும் பேச ஆரம்பிச்சுட்டா ... இப்போ கொஞ்சம் வாக்கியங்கள் பேச முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கா

November 2, 2010

தீபாவளி @ சிங்கப்பூர்

நம்ம ஊரை விட சிங்கப்பூரில்  தீபாவளி கொஞ்சம் நல்லாவே கொண்டாடுற மாதிரி தெரியுது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில்,நடிகைகளின் பேட்டிகளில், உலக தொலைகாட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக ....இப்படி  மட்டுமே  போய் கொண்டு இருக்கிறது  நம்ம தலை முறை தீபாவளி.....
 
இங்கே லிட்டில் இந்தியா என்னும் பகுதி முழுக்க முழுக்க நம்ம சென்னை மாதிரியே இருக்கும். என்ன கொஞ்சம் முன்னேறிய சென்னை
.. :-( .இந்த பகுதியில் தீபாவளிக்கு  ஒரு மாதம் முன்னாடியே தெரு முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்காக நிறைய தற்காலிக கடைகளும்  வந்துடும். இங்க எவ்ளோ தான் கூட்டம் இருந்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு இருக்கும். நம் பண்பாட்டை பறைசாற்றும் நிறைய கலை நிகழ்ச்சிகள், கைவினை பொருட்கள் ,இப்படி  கண்ணுக்கும்  மனசுக்கும் விருந்தாகும் நிகழ்ச்சிகள் நிறைய காணலாம்  . இங்கே உள்ள தமிழ் தொலைக்காட்சி  வசந்தமிலும் கூட சினிமா  சார்ந்த  நிகழ்சிகளுக்கு மட்டும் அல்லாமல் நிறைய பொது நிகழ்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும்...  
 
 

 

October 28, 2010

Baby touch and feel

புத்தகங்கள்
எனக்கும் சிவாவுக்கும் புக் படிக்கும் பழக்கம் நிறைய உண்டு. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை கண்டிப்பா லைப்ரரி போவோம் . அப்போ மித்துவுக்கும் புக் எடுக்க ஆரம்பிச்சு நாலு அஞ்சு மாசம் ஆச்சு.
இனிமே மித்துவின் புக் லிஸ்ட் அப்டேட் பண்ணலாம்னு ஆரம்பிச்சு இருக்கேன்
1  .  இந்த வாரம் "Baby  touch  and  feel  " புக் தான் படிச்சிட்டு இருக்கோம் . little அனிமல்ஸ் படம் போட்டு  அது கத்தும் ஒலியையும் போட்டு இருக்காங்க . அதோட உடம்பின் ஒரு உறுப்பை தொட்டு பாக்குற மாதிரியும் இருக்கு. So  இப்போ வாத்து,நாய் குட்டி, முயல் குட்டி, ஆட்டு குட்டி ,பூனை குட்டின்னு ஒரே சத்தம் தான் .
இங்க வீட்டுக்கு கீழ பூனைங்க ஜாஸ்தி. so  சின்ன வயசுலேர்ந்தே அவளுக்கு meow  சத்தம் பழக்கம் . நல்லா சொல்லுவா. இப்போ பப்பி ,Duck  சத்தம் பழகிட்டு இருக்கா.

விளையாட்டு

சிவா ஆபீஸ்   போன பின்னாடி கிட்ட தட்ட 9  மணி நேரம் நானும் , மித்ரா வும் தான். அதனால என் விளையாட்டு , வேலை எல்லாமே அவளோட தான் .
  1 .   ஆரம்பத்திலேர்ந்தே அவளுக்கு பிடிச்சது கலர் கலரான bolls . உருட்டி விடுறது, தூக்கிட்டு ஓடுறது, ஒளிச்சு வைக்கிறது, ஏதாவது பாத்திரத்தில்    போட்டு போட்டு எடுக்குறதுன்னு நிறைய விளையாடுவோம் .
2 .கொஞ்சம் உக்கார ஆரம்பிச்சவுடன் பப்பு மம்மு கடஞ்சு கடஞ்சுனு ஒரு டப்பாவும் , Spoonumaa  உட்கார்ந்த நல்ல நேரம் போகும்.
3 . மிதுக்கு 1 வயசு ஆரம்பத்திலேர்ந்தே லைப்ரரி போனா அவளுக்கு ஒரு புக் கண்டிப்பா உண்டு. அவ ரெகுலரா படிக்கலேன்னாலும் அப்போ அப்போ எடுத்து படம் பாப்பா ... இப்போ கொஞ்ச நாளா படிக்கிற நேரம் அதிகம் ஆகி இருக்கு .

விளையாட்டு

ரெண்டு நாலா buds டப்பாவோட தான் எங்க விளையாட்டு.
எல்லாத்தையும் கீழ கொட்டி மறுபடியும் பொறுமையா எடுத்து உள்ள வைக்கிறா . சில சமயம் உள்ள அடுக்கி குடுக்க வேண்டியது என் இல்லேன்னா சிவா வோட வேலை ... ஆனா தூக்கம் வர வரைக்கும் நல்ல பொழுது போகுது.
 
அப்புறம் தண்ணி , காபி இப்படி எந்த liquid  கிடைச்சாலும் இன்னொரு பத்திரம் எடுத்துகிட்டு transfer  பண்ணி விளையாடுறா. ஆனா போக போக கீழ சிந்துற      அளவு கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகுது . கைக்கும் கண்ணுக்கும் நல்ல coordination .
நேத்து அதே மாதிரி கடலை எடுத்து டப்பால போட்டு விளையாடுனா . ஒவ்வொன்னா போடா சொன்ன , ரெண்டு கடலை போட்டுட்டு மறுபடியும் அப்படியே கொட்ட ஆரம்பிச்சிட்டா .

October 27, 2010

வார்த்தைகள்

மித்து அம்மா , அப்பான்னு   8  மாசத்துலேய சொல்ல ஆரம்பிச்சுட்டா .
இதோ இப்போ 17 வது மாசம். இப்போ எல்லாம் தினம் தினம் புது புது  வார்த்தை பேசுறா .
பாத்ரூம்,ஸ்டார்,ஆபீஸ்,சப்பாத்தி ,ஜட்டி ,பாட்டில் ,பேபி, தாதா, பட்டி, ஆயா, அத்தை , மாமா, சியா( Sreeya -Friends  Daughter  Name ) இதெல்லாம் இப்போ கொஞ்ச நாளா ரொம்ப use பண்ற வார்த்தைகள்.

October 21, 2010

காய்கறி ஆம்லேட்

தேவையான பொருட்கள்:
முட்டை-1
கேரெட் -1
மிளகுதூள்,சீரக தூள்  -1 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
 
செய்முறை :
முட்டையை உடைத்து நன்கு  அடித்து கொள்ளவும்.
 கேரெட்டை தோல் சீவி துருவி கொள்ளவும் .
இதனை முட்டையுடன் கலந்து உப்பு, மிளகு சீரக தூள் சேர்க்கவும்.
தோசை கல் சூடானவுடன் முல்லை கலவையை ஊற்றி  சிறிது என்னை ஊற்றி மூடி வைத்து வேக விடவும் .
பின் திருப்பி போட்டு  இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன்  எடுக்கவும்.
 
பி.கு. : கேரெட் போலவே பீட்ரூட் ,முட்டைகோஸ் துருவியும் செய்யலாம் .சுவையான அதே சமயம் சத்து நிறைந்தது .

ராகி மால்ட்

ராகி மால்ட்-
 
செய்முறை
1 . சிறிது வெல்லத்தை சுடு நீரில் ஊற வைக்கவும்.
2 . கை பிடி அளவு ராகி கழுவி நீரில் ஊற வைக்கவும் .( குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வேண்டும்.)
3 . ஊறிய ராகியை நீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுத்து கொள்ளவும்.
4 . அதுனுடன் கரைத்த வெல்ல நீரையும் , சிறிது பாலும் விட்டு அடி கனமான பாத்திரத்தில்  மிக மிக குறைந்த தீயில் கிளறவும்.
ஆரம்பத்தில் சிறிது நீர்க்கவும், சிறி சிறிதாக கெட்டியாகவும் தரலாம். மிகவும் சக்தி நிறைந்தது, ஜீரணிக்க மிக எளிதானது.  
 
இதே முறையில் சிவப்பு அரிசி ,கோதுமை கஞ்சியும் செய்யலாம்

October 18, 2010

நிலா நிலா வா வா

முன்னாடி நிலவை காட்டுறது கொஞ்சம் கஷ்டம். இப்போ அவளுக்கு அது மேல தான் இருக்கும்னு தெரிஞ்சு வெளிய போனதுமே  தேடுறா... . நிலா நிலா வா வான்னு பாட கூட ஆரம்பிச்சாச்சு

Chubby Cheeks

Chubby Cheeks  பாட்டுக்கு மித்து ஆடுற  அழகே தனி .. அவளோட கன்னம் , என் கண்ணு, ன்னு மாத்தி மத்தி தொடுவா.
அவ வம்பு பண்றப்போ அவளை கொஞ்சம் divert பண்ணவும் எனக்கு  இது rombaaaa  use ஆவும்

விளையாட்டு

இப்போதைக்கு மித்ராவுக்கு பிடித்த ஒரே விளையாட்டு என் செருப்பை போட்டு வீடு முழுக்க நடப்பது தான்

October 14, 2010

மித்ராவுக்கு பிடித்தது

சாப்பாடு  : சப்பாத்தி, பால் சாதம்,தக்காளி சாதம்,கீரை, Fruit Juices
உடை: கையில்லாத பனியன் , அரை கால் பேன்ட்
பிடித்த விளையாட்டு : சறுக்கு, அம்மா , அப்பா கால்ல  குதிரை விளையாட 
பிடித்த பொம்மைகள் : மொத  மொத   வாங்கின குரங்கு பொம்மை,musical Crab
 
 
இன்னும் தொடரும் .....

சிங்கப்பூர் விமான நிலையம்

பாட்டியை ஊருக்கு  அனுப்பும் போது ஒரே ஆர்ப்பாட்டம் ... பெட்டியை  தர மாட்டேன்னு

October 7, 2010

தோசையம்மா தோசை

தோசையம்மா தோசை...
மித்துவுக்கு    தோசை சாப்பிடுவதை விட தோசை சுட ரொம்ப பிடிக்கும்.நான் எப்பவும் தோசை கல்லை அடுப்பில் வைத்தவுடன் , அவள் ஓடி வந்து தூக்க சொல்லுவாள்...
ஒரே நாளில் தோசை கரண்டியை பிடிக்கும் முறையை கற்று கொண்டாள்.. ( கொஞ்சம் ரிஸ்க் தான். பட் she is more conscious  than me ) வீட்டில் நாங்க ரெண்டு பேர் தான் .. எனக்கு ஒரே பேச்சு துணை    அவ தான் . அதனால் அவளுக்கு  புரியும்னு   நம்பி  எல்லா விஷயமும் அவ கிட்ட பேசுவேன் .அதே போல் தோசை  செய்முறையும் .. மாவு ஊத்தி , என்னை ஊத்தி,வெந்துச்சா ... வேகலையா .  திருப்பி போட்டு, .  இது அம்மாக்கு, இது அப்பாக்கு   ... நான் சொல்ல சொல்ல , அவளும் திருப்பி சொல்ல...
தோசை சாப்பிட வைக்க நடக்கும் போராட்டமே மறந்து போய்டும்..